»   »  கல்யாணம் ஆகியும் பேச முடியாம தவித்தேன்.. மைனாவின் காதல் கதை

கல்யாணம் ஆகியும் பேச முடியாம தவித்தேன்.. மைனாவின் காதல் கதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் அடாவடியாக நடிக்கும் பொண்ணு நந்தினிக்கு ரசிகர்கள் அதிகம். சமீபத்தில்தான் காதலித்த கார்த்திக்கை கரம் பிடித்துள்ளார். மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடி நிகழ்ச்சியில் தன் ஜோடியுடன் பங்கேற்று கஷ்டப்பட்டு விளையாடி வருகிறார். காதலரை திருமணம் செய்தும் வேலை விசயமாக மாப்பிள்ளை துபாய் போனதால் அவருடன் பேச முடியாமல் தவித்தாராம்.

வம்சம் சினிமாவில் நடித்த மைனா, கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியாளர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் என நந்தினி செம பிஸி.

வம்சம் தொடங்கி கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை என நடித்தாலும் சரவணன் மீனாட்சிதான் ரசிகர்களிடம் அதிகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது ஒரு நாள் கூத்து படம் மூலம் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

வம்சம் தொடங்கி சரவணன் மீனாட்சி வரை

வம்சம் தொடங்கி சரவணன் மீனாட்சி வரை

மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நந்தினி பி.பி.ஏ படித்திருக்கிறார். லோக்கல் டிவியில் ஆங்கரிங். அப்புறம் வம்சம் படத்தில் நடித்து இப்போது விஜய் டிவியில் வெளுத்து வாங்குகிறார். புது மணப்பெண்ணுக்கு உரிய களையோடு இருக்கும் நந்தினி தன்னுடைய கணவரைப் பற்றியும் மீடியா வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கில்லாடி நிகழ்ச்சி

கில்லாடி நிகழ்ச்சி

விஜய் டிவியில் இருந்தாலும் ஜீ தமிழில் மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடி நிகழ்ச்சியில் பங்கேற்றார் நந்தினி. அதனால் சில எபிசோடுகள் நந்தினியை பார்க்க முடியவில்லை. நான் சொல்லாம இன்னொரு சேனல் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அதனால கொஞ்சம் வெளியேற வேண்டியதாப் போச்சு என்கிறார் நந்தினி.

காதல் கல்யாணம்

காதல் கல்யாணம்

காதலிக்க ஆரம்பிச்ச நான்கு நாளில் வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. அடுத்து நிச்சயதார்த்தம், அடுத்த நாள் கல்யாணம். இதோ அவரு வேலை விஷயமா துபாய் கிளம்பிட்டாரு. கல்யாணம் ஆகியும் அவர்கிட்ட போன்ல கூட பேச முடியாம கஷ்டப்பட்டேன் என்கிறார் நந்தினி.

ரொம்ப லவ்

ரொம்ப லவ்

நான் போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் தான் கார்த்தி எனக்குக் கிடைச்சுருக்காரு. அவ்ளோ என் மேல பாசம், லவ். ஆனா லவ்வ சரியா காட்டத் தெரியாது. எனக்கு ஒண்ணுனா பதறிடுவாரு என்று கூறி வெட்கப்படுகிறார் நந்தினி.

English summary
Myna (Nandhini) made his debut in the popular film vamsam with kanjaa karuppu. Now She work saravanan Meenatchi (Season 2) vijay tv serial revathi role. Kalaka Povathu Yaru Judge.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil