»   »  சரவணன் மீனாட்சி 3 : கபாலி படம் ரிலீஸ்... ரஜினிக்கு பாலபிஷேகம் செய்த சரவணன்...

சரவணன் மீனாட்சி 3 : கபாலி படம் ரிலீஸ்... ரஜினிக்கு பாலபிஷேகம் செய்த சரவணன்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடித்த கபாலி திரைப்படம் வரும் 22ம் தேதிதான் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலில் நேற்றே படத்தை ரிலீஸ் செய்து ரஜினி கட் அவுட்டிற்கு பாலபிஷேகமும் செய்து விட்டனர்.

பல ரசிகர்களின் ஆதரவை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலின் 3வது சீசன் திங்கட்கிழமை முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சரவணனாக சன் மியூசிக் ரியோ நடிக்க, மீனாட்சியாக அதே ரக்ஷிதா நடிக்கிறார்.

இந்த சீசனில் சரவணனின் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா தங்கை என்று ஒரு குரூப் இருக்கிறது. அதேபோல மீனாட்சியின் அப்பாவாக பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் நடிக்க, அம்மாவாக அதே நடிகைதான் நடிக்கிறார்.

திருநெல்வேலி சரவணன்

திருநெல்வேலி சரவணன்

சரவணன் சொந்த ஊர் திருநெல்வேலி. ரகளையான பையன். திருநெல்வேலி தியேட்டரில் கபாலி படம் ரிலீஸ் ஆகவே, நண்பர்களுடன் இணைந்து ரஜினி கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடும் ரஜினி ரசிகன்.

போனில் வாழ்த்திய ரஜினி

போனில் வாழ்த்திய ரஜினி

பட ரிலீஸ் கொண்டாட்டத்தில் இருக்கும் சரவணனை போனில் கூப்பிட்டு வாழ்த்துகிறாராம் ரஜினி. அதே சந்தோசத்தில் மயங்கி விழுகிறாராம் சரவணன். வழக்கம் போல வெட்டியை ஊரை சுற்றி அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கும் பையனாகவே நடித்திருக்கிறார் ரியோ.

லண்டன் ரிட்டன் மீனாட்சி

லண்டன் ரிட்டன் மீனாட்சி

மீனாட்சிக்கு சொந்த ஊர் மதுரை. லண்டனில் படித்து விட்டு மதுரைக்கு வந்திருக்கிறார். இம்முறை பாவாடை தாவணி இல்லை. மாடர்ன் டிரஸ் போட்ட மீனாட்சியாக வருகிறார் ரக்ஷிதா.

ரகளையான குடும்பம்

ரகளையான குடும்பம்

மீனாட்சிக்கு ஒரு தம்பி, தங்கை. ரகளையான குடும்பம். பாசமான அப்பா, கண்டிப்பான அம்மா. சொந்த பிசினஸை பார்க்க வேண்டும் என்று அம்மா கூற, கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுத்து விட்டு வருகிறேன் என்று மீனாட்சி கொஞ்ச ஒய்வுக்குப் பின்னர் வருகிறேன் என்று சொல்லவே ஓகே சொல்லி விடுகிறார்.

மதுரைக்கு வருவாரா மைனா

மதுரைக்கு வருவாரா மைனா

பாவாடை தாவணியில் இரட்டை சடையும், சுற்றிய மல்லிகைப் பூவுமாய் அழகு மீனாட்சியாய் வலம் வந்த ரக்ஷிதா சீசன் 3யில் மாடர்ன் டிரஸ்... லூஸ் ஹேர் என வருகிறார். மீனாட்சியின் தோழி மைனா மதுரைக்கு வருவாரா என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.

சந்திப்பு எப்போது

சந்திப்பு எப்போது

சரவணன், மீனாட்சி குடும்பத்தினரின் அறிமுகம் மட்டுமே 2 எபிசோடில் நடந்திருக்கிறது. தேவதைக்காக சரவணன் காத்திருக்க, ரகளையான பையனுக்காக காத்திருப்பதாக கூறுகிறாள் மீனாட்சி. இருவரும் எங்கே எப்போது சந்திப்பார்கள்.. இவர்களாவது ஒன்று சேருவார்களா என்பதே பலரது கேள்வியாக உள்ளது. அதுக்கு இன்னும் 1000 எபிசோடு இருக்கிறது என்கிறது இயக்குநரின் மைண்ட் வாய்ஸ்.

English summary
Rajinikanath's Kabali movie release in Saravanan Meenakshi TV serial in Vijay TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil