»   »  ஆடி ஸ்பெஷல்... வாரத்தில ஆறு நாளு... விஜய் டிவியில சீரியல் பாருங்க மக்களே!

ஆடி ஸ்பெஷல்... வாரத்தில ஆறு நாளு... விஜய் டிவியில சீரியல் பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்களும் சன்டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியலை பார்த்து பார்த்து ஞாயிறன்று அழுது தீர்க்கின்றனர் இல்லத்தரசிகள். இப்படி இல்லத்தரசிகள் அழுது அழுது சீரியல் பார்ப்பதால் சன் டிவியின் டிஆர்பி எகிறிக் கிடக்கிறது.

இதே பாணியை இப்போது விஜய் டிவியும் கையில் எடுத்து விட்டது. இனி விஜய் டிவியும் திங்கள் முதல் சனி வரை சீரியலை ஒளிபரப்புகிறது. ஆடி ஸ்பெஷலாக இனி வாரத்திற்கு ஆறு நாள் சீரியலை பாருங்க ரசிகர்களே என்று பிரியா, ரக்ஷிதா ஆகியோர் வந்து ஒரு குத்தாட்டம் போட்டு கூறுகின்றனர்.

இந்நிலையில் இளைஞர்கள் மத்தியில் விஜய் டிவி மிகவும் பிரபலம், ஏனெனில் நல்ல ரியாலிட்டி ஷோக்களால் பலரையும் கவர்ந்தது இந்த தொலைக்காட்சி. ஆனால், இவர்களும் சீரியலின் தாக்கத்தால் சனிக்கிழமையும் சீரியல் ஒளிப்பரப்ப முடிவு செய்து விட்டார்கள். இது விஜய் டிவியை ரசிக்கும் இளைஞர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

சன் டிவியில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி தொடங்கி இரவு 10.30 மணிவரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன. சனி, ஞாயிறுகளில் திரைப்படம் ஒளிபரப்பானது. புதுப்படங்கள் ஒளிபரப்புவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து சீரியலை சனிக்கிழமையும் ஒளிபரப்பினார்கள். ஞாயிறு அன்று புதுப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கினர்.

வெள்ளிக்கிழமை முக்கியமான எபிசோடு முடிந்து சீரியல் பார்க்க இனி 2 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்று கவலைப்பட்ட சீரியல் ரசிகர்களுக்கு சன்டிவியில் ஒருநாள் எக்ஸ்ரா சீரியல் ஒளிபரப்பாகுதே என்று சந்தோசப்பட்டனர்.

தொலைக்காட்சிகளுக்கு அதிக டிஆர்பி தரும் விஷயம் கண்டிப்பாக சீரியலாக தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஜய்டிவியும் இனி வாரத்தில் 6 நாட்களும் சீரியலை ஒளிபரப்புகிறது. இனி விஜய் டிவியில் சீதையின் ராமன், பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல்வரை ஆகிய சீரியல்களை 6 நாட்களும் கண்டு மகிழலாம்.

ஆடி ஸ்பெஷல் மட்டுமல்ல துப்பாக்கி, கும்கி, நண்பன் என போட்ட படங்களையே திரும்ப திரும்ப போட்டு போராடிவிட்டதாலும், இனி ஒளிபரப்ப புது படங்கள் கை வசம் இல்லாத காரணத்தினாலும் சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விட்டது விஜய் டிவி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Aadi Utsav, Vijay TV telecast its Serials from Monday to Saturday from this July 18, 2016. Audience can now rejoice watching their favorite serials for one more extra day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil