»   »  ‘கஜினி’ ஆன மீனாட்சி... கன்பார்மா இப்போதைக்கு சரவணனன் மீனாட்சியை முடிக்க மாட்டாங்க பாஸ்!

‘கஜினி’ ஆன மீனாட்சி... கன்பார்மா இப்போதைக்கு சரவணனன் மீனாட்சியை முடிக்க மாட்டாங்க பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது.

ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சியாக நடித்த செந்திலும், ஸ்ரீஜாவும் நிஜத்தில் தம்பதிகளாகவே மாறி விட்டனர். ஆனபோதும் அந்த சீரியலை நிறுத்தாத விஜய் டிவி அடுத்த தலைமுறையாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. பல பரம்பரைகளுக்கு இது தொடரும் போல.

சரவணன் மீனாட்சி தம்பதியின் மகனான சரவணனுக்கும், மீனாட்சியின் அண்ணன் மகளான மீனாட்சிக்கும் காதல் மலர்ந்தது.

குழப்பமான கதை...

குழப்பமான கதை...

பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்குப் பைத்தியம் பிடித்தால்' என இந்த பெயர் குழப்பம் ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில் கதையோடு மக்கள் லயித்துப் போனார்கள்.

வேட்டையன்...

வேட்டையன்...

நன்றாக சென்று கொண்டிருந்த சரவணன் மீனாட்சி தொடரில் திடீரென லகலகவென வேட்டையன் கதாபாத்திரம் புகுந்தது. பின் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் திடீரென சரவணன் மாயமாக, மீனாட்சி கழுத்தில் வேட்டையனே தாலி கட்டினார்.

வேட்டையன் மீனாட்சி...

வேட்டையன் மீனாட்சி...

இதனால் சரவணன் மீனாட்சி, வேட்டையன் மீனாட்சி ஆனது. ஆனால் தொடரின் பெயரை மாற்ற விரும்பாத இயக்குநர், ‘கண்ணா வேட்டையனுக்கு சரவணன்னு இன்னோரு பேரும் இருக்கு' என திடீர் டிவிஸ்ட் வைத்தார்.

மனம் மாறுவார்...

மனம் மாறுவார்...

அப்படியானால், மீனாட்சி இந்த வேட்டையனோடு தான் மனம் மாறி வாழப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தொடர்ந்து காட்சிகளும் அதை உறுதி செய்வது போலவே ஒளிபரப்பாகின.

அந்த 7 நாட்கள் ஸ்டைல்...

அந்த 7 நாட்கள் ஸ்டைல்...

ஒருவேளை சரவணனே திரும்ப வந்தாலும், அந்த 7 நாட்கள் பட ஸ்டைலில், ‘எண்ட காதலி உங்களுக்கு மனைவியாகலாம், பட்சே உங்க மனைவி எனக்கு காதலி ஆக முடியாது' என டயலாக் பேசி சுபம் போடுவார்கள் என மக்கள் நம்பினார்.

திடீர் திருப்பம்...

திடீர் திருப்பம்...

ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் அதெப்படி அதுக்குள்ள சுபம் போடுவோம் என அதிரடி திருப்பம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். ஆம், விபத்தில் சிக்கிய மீனாட்சிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டது. ரப்பரை வச்சு அழிச்சுட்டாங்க எல்லாத்தையும்.

பூராப் பயலையும் மறந்துருச்சு மீனாட்சி...

பூராப் பயலையும் மறந்துருச்சு மீனாட்சி...

இதனால் சரவணன், வேட்டையன் என எல்லாவற்றையும் அவர் மறந்து விட்டார். மீனாட்சிக்கு திருமணம் ஆனதை அவருக்கு ஞாபகப் படுத்தக்கூடாது என அவரது அப்பாவும் கறாராகச் சொல்லி விட்டார்.

திரும்பவும் முதல்ல இருந்தா...

திரும்பவும் முதல்ல இருந்தா...

இதனால், அடுத்து வரும் சில நாட்களுக்கு மீனாட்சியின் மறதியை வைத்தே காட்சிகள் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு மெல்ல மெல்ல ஞாபகம் வந்து அவர் காதலன் சரவணனைக் கரம் பிடிக்கிறாரா இல்லை கணவர் சரவணனுடன் சேர்ந்து வாழப்போகிறாரா எனத் தெரியும்.

திரும்பவும் முதல்ல இருந்தா... இப்பவே கண்ணைக் கட்டுதே!

English summary
As the lead character Meenakshi of Saravanan meenakshi serial in Vijay TV, has lost her memories. It is predicted that it will continue for more time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil