»   »  சரவணன்-மீனாட்சிக்கு முடிவே கிடையாதா?... கதறும் நெட்டிசன்கள்

சரவணன்-மீனாட்சிக்கு முடிவே கிடையாதா?... கதறும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன்-மீனாட்சி சீரியலுக்கு ஒரு முடிவு கிடையாதா? என நெட்டிசன்கள் கதறி வருகின்றனர்.

இந்த சீரியலின் முதல் பாகம் முடிந்ததைத் தொடர்ந்து 2 வது பாகத்தினை ஒரு சுபயோக சுபதினத்தில் விஜய் டிவி தொடங்கியது. 2 வது பாகத்தில் மீனாட்சியின் காதலன் சரவணனாக இதுவரை 4 பேர் நடித்து விட்டனர்.

சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் ரசிகர்களின் சந்தோஷம் நீண்டநாள் நிலைக்கவில்லை.

சரவணன்-மீனாட்சி 2 வது பாகத்தைத் தொடர்ந்து 3 வது பாகத்தைத் தொடங்குவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இதனால் இதற்கு ஒரு முடிவே கிடையாதா? என நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.,

அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

சரவணன்- மீனாட்சி

சரவணன்- மீனாட்சி

சரவணன்-மீனாட்சி 3 வது பாகத்தை விஜய் டிவி ஒளிபரப்புவதைக் குறிப்பிட்டு இதுக்கு ஒரு முடிவு கிடையாதா? என்று கேட்டுள்ளனர்.

விவேக்

விவேக்

ரியோவுடன் மீனாட்சி பைக்கில் வருவது போன்ற காட்சியை விவேக் காமெடியுடன் ஒப்பிட்டுக் கலாய்த்துள்ளனர்.

மறுபடியும்

மறுபடியும்

சரவணன்- மீனாட்சி 3 வது பாகத்துக்கு வடிவேலுவின் இந்த காமெடி ரொம்பவே பொருத்தம்.

புது சரவணன்

புது சரவணன்

என்ன புது சரவணனா? என சூர்யா கேட்பது போன்று தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

ஆள விடுங்க

ஆள விடுங்க

சரவணன்-மீனாட்சி 2 வது பாகம் முடிந்தபோது சந்தோஷப்பட்ட மக்கள், அடுத்த பாகத்தின் அறிவிப்பைப் பார்த்து கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்கள்.

சரவணன்- பாஞ்சாலி

சரவணன்- பாஞ்சாலி

சரவணன்-மீனாட்சி இன்னொரு பாகம் எடுத்தா பேரை மாத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Saravanan - Meenatchi 3rd Sequel Related Memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil