Don't Miss!
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
'பப்பாளி' வரட்டும்.. 'மீனாட்சி'யை மணந்த கதையை சொல்கிறேன்.. 'சரவணன்' அறிவிப்பு!
சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன் மிர்ச்சி செந்திலும் நாயகி ஸ்ரீஜாவும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட செய்திதான் இன்றைக்கு ஊடகங்களில் ஹாட்.
சிலருக்கு இது ஆச்சரியம், சிலருக்கு இது அதிர்ச்சி. ஏனெனில் மிர்ச்சி செந்தில் ஏற்கனவை திருமணமானவர். விவாகரத்து செய்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரையில் பிரபலமான இந்த ஜோடி கடைத் திறப்புவிழா, விளம்பரப்படங்கள் என அனைத்திலும் இணைந்தே நடித்தனர். இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர்.

மதுரை தொடரில்
விஜய் டிவியில் மதுரை என்ற தொடரில் சரவணன் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தனர் செந்தில், ஸ்ரீஜா.

பிரபலப்படுத்திய சீரியல்
சரவணன் மீனாட்சி என்ற பெயரிலேயே அடுத்த சீரியலை விஜய் டிவி தொடங்கியபோது இதே ஜோடி கணவன் மனைவியாக நடித்தனர்.

மக்கள் முன்னிலையில்
இந்தத் தொடருக்காக மக்கள் முன்னிலையில் நிச்சயம், திருமணம் என்று அமர்களப்படுத்தினர்.

ரொமான்ஸ் ஜோடி
சினிமாவைவிட அழகான ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருந்த சரவணன் மீனாட்சி தொடர் மக்களிடையே ஓரளவிற்கு வரவேற்பினை பெற்றது.

காதல் கிசுகிசு
ஊடலும் கூடலுமாக இருந்த தொடரில் செந்தில் ஸ்ரீஜா நிஜமாகவே காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கடந்த ஆண்டே செய்திகள் வெளியானது.

மாற்றப்பட்ட இயக்குநர்
இந்த காதல் பற்றி பேட்டி கொடுத்த இயக்குநர் அழகர் அந்த தொடரில் இருந்தே மாற்றப்பட்டார். கதையும் வேறு தளத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

ரீல் ரியலானது
இந்தக் காதல்பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை செந்தில் ஸ்ரீஜா ஜோடி மறுக்கவில்லை. அதே சமயம் ஒத்துக்கொள்ளவும் இல்லை. ஏனெனில் செந்தில் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

சினிமாவில் பிரபலம்
இதனிடையே செந்தில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்தார். ஸ்ரீஜா உடன் கருத்து வேறுபாடு என்றும் நடிகையைக் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

தொலைக்காட்சி விருது விழா
இதனிடையே கடந்த மாதம் விஜய் தொலைக்காட்சி சின்னத்திரை விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த கதாநாயகனாக செந்தில், சிறந்த கதாநாயகியாக ஸ்ரீஜா தேர்வு செய்யப்பட்டனர்.

மீண்டும் இணைந்த ஜோடி
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்த ஜோடியை ரசிகர்கள் விருது விழாவில்தான் மீண்டும் சந்தித்தனர். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதியானது.

திருப்பதியில் திருமணம்
இதனிடைய சில தினங்களுக்கு முன்னர் ஒருசில உறவினர்கள் முன்னிலையில் செந்தில் ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

பப்பாளி ரிலீஸ்
இந்த திருமணம் குறித்து கருத்து கூறியுள்ள செந்தில், திருமணம் நடைபெற்றது உண்மைதான். வெள்ளிக்கிழமை நான் நடிக்கும் பப்பாளி படம் ரிலீசாக உள்ளது அதற்குப் பின்னர் விபரம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எப்படியோ ஒரு ரீல் மேரேஜை ரியல் மேரேஜ் ஆக மாற்றிவிட்டனர் இந்த சரவணன் மீனாட்சி.