twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டம் பற்றிக் கூறும் சத்தியத் தராசு

    By Mayura Akilan
    |

    Sathiyam TV on Sathiya Tharasu
    "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல்களின் வாதம்தான் வெளிச்சம் தரும் விளக்கு" என்பார்கள். சட்டம் பற்றி சாமான்ய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சத்தியம் தொலைக்காட்சியில் 'சத்தியத்தராசு' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, சத்தியத்தராசு.

    வாழ்வில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள் வலிமையானவர்களால் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் அனைவரும் சட்டத்தின் மூலமாக நிரந்தர தீர்வு காண விரும்புகிறார்கள்.

    வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் சட்டத்தின் கதவு திறக்குமா? ஏழ்மையானவர்களும் சட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ள சத்தியம் டிவி சத்தியத்தராசு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இரண்டு வழக்கறிஞர்களை கொண்டு சட்டத்தை பற்றி விளக்கும் நிகழ்ச்சி இது.

    எந்த பிரச்சினைக்கு, எந்த மாதிரியான சட்டங்களின் மூலம் தீர்வு காண முடியும்? சில பிரச்சினைகளுக்கு வழக்கு தொடர்வது, மற்றும் அதை எதிர்கொள்வது என்பது பற்றியும் இந்த நிகழ்ச்சியில் விரிவாக சொல்லப்படுகிறது. சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகிறது சத்தியத்தராசு.

    English summary
    Law is the basis for this live show. A team of lawyers will discuss common legal tangles faced by people, who can even call up and air their woes and clarify their doubts on various legal issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X