»   »  அது ஏங்க இந்தப் பிரகாசுக்கும், அண்ணிகளுக்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு?

அது ஏங்க இந்தப் பிரகாசுக்கும், அண்ணிகளுக்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெய்வமகள் சீரியலில் நாயகன் பிரகாசுக்கும், பழைய அண்ணியார் காயத்ரிக்கும் தான் ஏழாம் பொருத்தமாக இருந்தது என்றால், தற்போது அதே கெமிஸ்ட்ரி புதிய அண்ணியிடமும் தொடருகிறது.

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா சீரியல் தெய்வமகள். சீரியலின் டைட்டில் சாங் முதற்கொண்டு நாயகியை முன்னிறுத்தும் கதையாக காட்டப்பட்டாலும், பெரும்பாலும் பிரகாஷுக்கும், அவரது மூத்த அண்ணிக்கும் நடக்கும் பிரச்சினை தான் இன்றளவும் அந்த சீரியலை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று வருகிறது.

அதிலும், பிரகாஷ் தனது மூத்த அண்ணியான காயத்ரியை ‘அண்ணியாரே' என அழைப்பதே தனி ஸ்டைல்.

புதிய அண்ணி...

புதிய அண்ணி...

இந்நிலையில், தற்போது காயத்ரி ஜெயிலில் இருக்கிறார். ஏற்கனவே அவருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து கிடைத்து விட்டதால், தற்போது பிரகாஷின் அண்ணனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முயற்சி செய்து வருகின்றனர்.

கோபத்தில் சளைத்தவரல்ல...

கோபத்தில் சளைத்தவரல்ல...

இந்தப் புதிய அண்ணி கதாபாத்திரமானது காயத்ரியைப் போல் வில்லி இல்லாவிட்டாலும், நீதி, நேர்மை என அநியாயத்துக்கு கோபப்படுகிறார். எப்போதும் முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு சிரிப்பு என்ன விலை என்கிறார்.

மோதல்...

மோதல்...

இந்த சூழ்நிலையில் அவரது அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து ஊழியர் ஒருவரை பிரகாஷ் தாக்குகிறார். இதனால், பிரகாஷுக்கும், அவருக்கு புதிதாக வரப்போகிற அண்ணியாருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது.

திருமணத்தில் சிக்கல்...

திருமணத்தில் சிக்கல்...

உண்மை என்ன என்பதை இருவருமே வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாமல், சண்டை பெரிதாகிறது. இது தொடர்பாக பிரகாஷின் அண்ணனிடமும், புதிய அண்ணி முறையிடுகிறார். அவரும் கூட பொறுமையாக உண்மையை எடுத்துக் கூறாமல், அப்பெண்ணிடம் எகிற, திருமணத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

அண்ணிகளால் பிரச்சினை...

அண்ணிகளால் பிரச்சினை...

கதையின் போக்கைப் பார்க்கும்போது எப்படியும் அவர் தான் பிரகாஷின் இன்னோரு அண்ணியாராக வருவார் என்பது உறுதியாக தெரிகிறது. இதனால், இனி பிரகாஷுக்கு எதிராக இரண்டு வில்லி அண்ணிகள் போடும் சண்டைகளை வைத்து, காட்சிகளை ஜவ்வாக இயக்குநர் இழுக்கலாம் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

English summary
In Sun TV's Deivamagal serial, the lead role Prakash's second anni also fights with him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil