நாக ராஜா பற்றி தெரிஞ்சுக்க ஆசையா?
நாகங்கள் பற்றி அறிந்து கொள்வதில் இன்றைக்கும் ஆர்வம் அதிகம் இருக்கிறது. நாகங்களை தெய்வமாக வழிபடுவதும், விஷ ஜந்துவாக எண்ணி அடித்துக் கொல்வதும் இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நாகங்களின் இனச்சேர்க்கை, ராஜ்ஜியத்தை தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலை... முட்டையிட்டு தன் இனம் உற்பத்தியாகி வெளியே வரும் வரை அதை பாதுகாக்கும் தன்மை என ராஜநாகங்கள் தனி ராஜங்கமே நடத்துகின்றன.
நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ஒளிபரப்பாகும்'சீக்ரெட்ஸ் ஆப் கிங் கோப்ரா' நிகழ்ச்சியில் ராஜ நாகங்களின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ராஜ நாகங்களின் போட்டி
காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ராஜ நாகங்கள் இணை சேர்ந்திருக்கும் போது வெளியில் இருந்து வரும் ஆண் ராஜ நாகத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ராஜ நாகத்திற்கும் போட்டி உருவாகிறது.

பெண்ணைக் கொல்லும் ஆண்
பெண் ராஜ நாகத்துடன் இருந்த ஆண் ராஜ நாகம் புதிதாய் வந்த ராஜநாகத்துடனான சண்டையில் தோற்றுப் போய் வெளியேறி விடவே பெண்ணுடன் இணைய நினைக்கிறது ஆண் ராஜநாகம், ஆனால் அதனை கடித்துக் கொன்று விடுகிறது புதிய ராஜ நாகம். இந்த போராட்டத்தைக் காணும் போதே சிலிர்க்கிறது.

விலங்குகளும் கூட
வயிற்றில் மற்றொரு ஆண் ராஜநாகத்தின் முட்டையை சுமந்து கொண்டுள்ள பெண் ராஜ நாகம் புதிய ஆணுடன் சேருவதை விரும்பாமல் தன் உயிரையே இழக்கிறது. விலங்குகள் கூட இதை உணர்த்துகிறது.

குட்டியை சாப்பிடுமா?
முட்டையிட்டு குட்டி உருவாகும் வரை பசியோடு காத்திருக்கும் ராஜ நாகம் வெளிவரும் குட்டிகளை சாப்பிட்டுவிடும் என்பார்கள். ஆனால் இங்கே குட்டி வெளி வரும் சமயத்தில், அவற்றை சுதந்திர காற்றை சுவாசிக்க விட்டு விட்டு இரை தேடி வேறு இடம் போகிறது தாய் ராஜ நாகம்.

நாகங்களின் மீதான பயம்
பாம்புகள் விஷத் தன்மை வாய்ந்தவை. அதனால்தான் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்கின்றனர். பாம்புகளைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் வரை அந்த பயம் இருக்கத்தான் செய்யும்.

அழகான காட்சிப்படுத்தல்
ராஜ நாகங்களைப் பற்றி ரகசியங்களையும், இரை தேடும் தன்மையைப் பற்றியும் சீக்ரெட்ஸ் ஆப் கிங் கோப்ராவில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். வனப்பகுதியும், வளைந்து நெளிந்து செல்லும் பாம்பின் அழகும் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் சலிக்காமல் பார்க்கத்தூண்டுகின்றன.


Click it and Unblock the Notifications











