»   »  கவர்ச்சி... கண்ணீர்... சண்டை... சன்னிலியோன் கலக்கும் ஸ்பிலிட்ஸ் வில்லா 9

கவர்ச்சி... கண்ணீர்... சண்டை... சன்னிலியோன் கலக்கும் ஸ்பிலிட்ஸ் வில்லா 9

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான ட்விஸ்ட்டுகள், கவர்ச்சி கன்னிகளின் சண்டைகள், காளைகளின் சர்ச்சைகள் என மீண்டும் களமிறங்கிவிட்டது எம் டிவியின் ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 9. இளைஞர்கள் அதிகம் விரும்பும் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் என்றால் முதலும் முக்கியக் காரணமும் சன்னி லியோன் மற்றும் ரான்விஜய் சிங் தொகுத்து வழங்குவதே.

போர்னோ படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இந்தியாவிற்கு வந்தார். ஜிஸ்ம் 2 என்ற படம் மூலம் பாலிவுட் பட உலகிற்குள் நுழைந்தார். சன்னியின் நடிப்பில் வெளிவந்த ராகிணி எம்.எம்.எஸ்-2 படம் ஹிட் அடிக்கவே சன்னியின் மார்க்கெட் கணிசமாக உயர்ந்தது.

பாலிவுட்டில் பரபரப்பாக நடித்து வந்தாலும், தமிழ், தெலுங்கு படங்களிலும் ஒரு பாடல், சில காட்சிகளில் நடித்து வருகிறார். தற்போது எம். டிவியின் கவர்ச்சி தொகுப்பாளினியாக மாறி ஸ்பிலிட்ஸ் வில்லா நிகழ்ச்சியை கடந்த இரு ஆண்டுகளாக தொகுத்து வருகிறார்.

எம்.டிவி தொகுப்பாளினி

எம்.டிவி தொகுப்பாளினி

சன்னி லியோனின் கவர்ச்சியும் புகழும் பாலிவுட்டில் எகிறி இருப்பதால் எம்.டி.வி அவரை அணுகியது. ஸ்பிலிட்ஸ் வில்லாவின் 7வது சீசனில் இருந்து வெற்றிகரமாகமாக நடத்தி வரும் சன்னி லியோன் தற்போது 9வது சீசனை நடத்தி வருகிறார். இதற்காக பெரும் தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.

ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 9

ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 9

ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 9 ரியாலிட்டி ஷோ கடந்த 11ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆறு இளவரசிகள், 15 பிரபல ஆண்கள் என கச்சேரி களை கட்டியுள்ளது. சன்னிலியோன் சும்மா அள்ளுகிறார்.

சர்ச்சைகளும் சந்தோசங்களும்

சர்ச்சைகளும் சந்தோசங்களும்

இந்த சீசனில் இம்முறை கொஞ்சம் சர்ச்சைகளை அதிகம் கிளப்ப திட்டமிட்டுவிட்டார்கள் போல. ஆண்களை அடக்கும் பெண்கள் என்னும் கான்செப்ட்டைக் கையில் எடுத்துள்ளனர்.

கவர்ச்சி நிகழ்ச்சி

கவர்ச்சி நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பங்குபெறும் பெண்கள் சாதாரணமானவர்களாக இருக்க, சீரியல், விஜே என்று லைம் லைட்டில் இருக்கும் ஆண்களுக்கு இணையாக அவர்கள் கலாய்த்துத் தள்ளுகின்றனர். கலவரத்தோடு கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது இந்த ஸ்பிலிட்ஸ் வில்லா.

நீச்சல் குளத்தில் சண்டை

நீச்சல் குளத்தில் சண்டை

இந்த நிகழ்ச்சியின் டிரெய்லரிலேயே ஆண்களும் பெண்களும் நீச்சல் குளத்தில் சண்டையிடுவது போலும், அழுவது போன்றும் விளம்பரப்படுத்தினர். ஆள் ஆளுக்கு கோபமாய் சண்டை போட்டு கொள்கின்றனர் எல்லாம் டிஆர்பிக்காகத்தான் என்பது பார்ப்பவர்களுக்கு தெரியாதா என்ன?

திணறும் பிரபலங்கள்

திணறும் பிரபலங்கள்

உங்களுக்குப் பிடித்தவை, பிடிக்காதவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் எனச் சொல்ல ஆறு பெண்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறித்தான் போகின்றனர் ஆண் பிரபலங்கள்.

அதிகரிக்கும் ரசிகர்கள்

அதிகரிக்கும் ரசிகர்கள்

இளைஞர்கள் அதிகம் விரும்பும் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் கவர்ச்சி நாயகி சன்னி லியோனும் கட்டழகான ரான்விஜய் சிங் தொகுத்து வழங்குவதுதான்.

எகிறும் டிஆர்பி

சன்னிலியோனைப் பார்த்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கத்தான் செய்கிறது. ஆறு பெண்கள். கேட்கவா வேண்டும்.பார்க்கலாம் யாரெல்லாம் அழுகிறார்கள், யாரெல்லாம் ஓவர் ஆக்டிங் செய்து டிஆர்பிஐ எகிற வைக்கிறார்கள் என்பதை போக போக பார்க்கலாம்.

English summary
MTV Splitsvilla has grown to be one of the most popular shows on television over the last few years. With Sunny Leone and Rannvijay in it, the show gained even more popularity in recent times.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil