பாரதி கண்ணம்மாவில் அடுத்த செம ட்விஸ்ட்... அட இதை யாருமே எதிர்பார்க்கலியே

சென்னை : தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே டிஆர்பி.,யில் டாப் ரேட்டிங்கை பெற்றிருப்பது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தான். தமிழ் டிவி சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக எனக் கூறி எத்தனை ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என வைத்தாலும் மற்ற சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் சரிந்து தான் காணப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. சென்டிமென்ட், காதல், வில்லி - வில்லன்களின் சதி வேலைகள், மாமியார் - மருமகள் பிரச்சனை என எத்தனை அம்சங்களை வைத்தாலும் அதையும் தாண்டி மக்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு பாரதி கண்ணம்மா சீரியலே உதாரணம்.

வெண்பாவின் அடுத்த பிளான்

வெண்பாவின் அடுத்த பிளான்

மிக விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியிடம் வளரும் ஹேமா கண்ணம்மாவிடமும், கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி பாரதியிடமும் சூழல் காரணமாக மாறி உள்ளனர். இதுவரை பாரதி - கண்ணம்மாவை பிரிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருந்த வில்லியான டாக்டர் வெண்பா, தற்போது அஞ்சலியின் உடல்நிலை குறித்த ரகசியம் தெரிந்த பிறகு, அவருக்கு தவறான மருந்தை கொடுத்து, அந்த பழியை பாரதி மீது சுமத்தும் வேலையில் இறங்குகிறார்.

க்ளைமாக்சை நெருங்குகிறதா

க்ளைமாக்சை நெருங்குகிறதா

லட்சுமி, கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தான் என்பதை தெரிந்து கொள்ளும் பாரதி, அந்த உண்மையை வெளியில் கொண்டு வருவதற்காக லட்சுமியை தன் வீட்டிற்கு தூக்கி செல்கிறான். இதனால் பாரதிக்கு உண்மை தெரிய போகிறது. யார் உண்மையை சொல்வார்கள், பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர போகிறார்கள், பாரதி கண்ணம்மா சீரியல் க்ளைமாக்சை நெருங்குகிறது என ரசிகர்கள் பலவிதங்களில் யோசித்து, அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இது செம ட்விஸ்டா இருக்கே

இது செம ட்விஸ்டா இருக்கே

ஆனால் டைரக்டர் வேறு விதமாக யோசித்து யாரும் யோசித்து பார்க்காத ஆங்கிளில் யோசித்து செம ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். எல்லோரும் பாரதிக்கு எப்போ குழந்தைகள் பற்றிய உண்மை தெரியும் என எதிர்பார்க்கும் போது, குழந்தைகள் பற்றிய உண்மையை முதலில் கண்ணம்மாவிடம் சொல்லி, வேற லெவல் ட்விஸ்டை வைத்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா

உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா

லட்சுமியை தன்னுடன் அனுப்ப பாரதி மறுத்து விட்டதால் சோகமாக இருக்கும் கண்ணம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இதனால் அவர் லேடி டாக்டர் ஒருவரை சென்று பார்க்கிறார். அவர் தான் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர். அவர் கண்ணம்மாவிடம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணம்மா, உடனடியாக மாமியார் செளந்தர்யாவிற்கு போன் செய்து உண்மையை சொல்லும் படி கேட்கிறாள். இது தான் இந்த வாரம் நடக்க போகிறதாம்.

உடைபடும் ரகசியம்

உடைபடும் ரகசியம்

வரும் வாரத்திற்கான ப்ரோமாவில் குழந்தைகள் பற்றிய உண்மை கண்ணம்மாவிற்கு தெரிவதாக காட்டப்படுகிறது. கண்ணம்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டதால் செளந்தர்யாவும் வேறு வழியில்லாமல் ஹேமா, லட்சுமி இருவருமே கண்ணம்மாவின் பிள்ளைகள் தான் என்ற உண்மையை சொல்லி விடுகிறாள்.

 இன்னொரு ட்விஸ்டா

இன்னொரு ட்விஸ்டா

டாக்டர் வெண்பாவாக நடிக்கம் ஃபரீனா நிஜத்தில் கர்ப்பமாக உள்ளதால் அவர் பிரசவம் முடிந்து திரும்பும் வரை பிரேக் கொடுக்க உள்ளார்கள். ஆனால் அவர் பிரேக் எடுக்கும் முன்பு மற்றொரு ட்விஸ்டையும் வைத்துள்ளார்களாம். அதற்கு பிறகு பாரதி, கண்ணம்மா, குழந்தைகளை சுற்றி தான் கதை நகர போகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X