Don't Miss!
- News
உச்சநீதிமன்ற உத்தரவால் ஈபிஎஸ் புதுதிட்டம்.. ஈரோடு கிழக்கு வேட்பாளர் தேர்வுக்கு மாற்றுவழி! என்னவாம்?
- Lifestyle
இந்த 5 காரணங்களுக்காகதான் மக்கள் மோசமான திருமண வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்களாம்...!
- Automobiles
திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கேட்டீங்களா..!!
- Sports
இந்தியா மீது குவியும் பிட்ச் குற்றச்சாட்டுக்கள்.. அஸ்வின் தரமான பதிலடி.. அட இது நல்லா இருக்கே!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சரவணன்-மீனாட்சி புகழ் செந்தில், ஸ்ரீஜா பிரிந்துவிட்டார்களாமே!
சென்னை: சரவணன் மீனாட்சி தொடர் புகழ் செந்தில், ஸ்ரீஜா இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டார்களாம்.
சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது அந்த திருமணம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை
தனது மனைவியை கேரளா ஏஞ்சல் என்று கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தில். தற்போது இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்து வருகிறார்கள்.

காதல்
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபோது அல்ல மாறாக திருமணத்திற்கு பிறகே காதலிக்க ஆரம்பித்தோம் என்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

பிரிவு
பிரச்சனை முற்றி செந்திலும், ஸ்ரீஜாவும் பிரிந்து வாழ்கிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று திருமணம் செய்ததாக செந்தில், ஸ்ரீஜா முன்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில்
செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று அவர் ஸ்ரீஜாவை மணந்தபோது தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஸ்ரீஜாவையும் அவர் பிரிந்துள்ளார்.