Don't Miss!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- News
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சில சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்..சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேரளா ஏஞ்சல்… பத்தனம்திட்டா பைங்கிளி….. ஸ்ரீஜாவை கொஞ்சும் மிர்ச்சி செந்தில்
என் திருநெல்வேலி ஐஸ்வர்யா ராய்... கல்லிடைக்குறிச்சி ஏஞ்சல் இது சரவணன் மீனாட்சி தொடரில் தொடரில் சரவணன் பேசும் முக்கியமான வசனம். இப்போது அதே மீனாட்சியை (ஸ்ரீஜா) நிஜமாகவே திருமணம் செய்து கொண்ட சரவணன் (மிர்ச்சி செந்தில்) தன்னுடைய காதலியை கேரளா ஏஞ்சல் என்று கொஞ்சுகிறாராம்.
கடந்த 15 நாட்களாகவே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதே செய்திதான். ஏம்ப்பா... அந்த சரவணன் மீனாட்சி நிஜமாகவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாப்பா? உண்மையா போட்டோ வந்திருக்கே என்றெல்லாம் ஆளாளுக்கு விசாரிப்புக்கள்தான்.
ரேடியோ மிர்ச்சியில் நீங்க நான் ராஜா சார் நிகழ்ச்சியில் திருமணம் நடந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார் செந்தில். ரசிகர்களின் ஆசையை நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு என் குடும்பத்தார் நிறைவேற்றி வைத்திருக்கின்றனர் என்றெல்லாம் சொன்னார். தம்பதி சகிதமாக ரேடியோ மிர்ச்சியில் தங்கள் திருமணத்தைப் பற்றி பேசினார்கள் செந்தில் ஸ்ரீஜா.

காதலிக்கவே இல்லை
சரவணன் மீனாட்சியில் நடித்த போது இருவரும் காதலிக்கவே இல்லை. சீரியலில் நெருக்கமாக நடிப்பதை பார்த்து விட்டு மற்றவர்கள்தான் அப்படி நினைத்தார்கள். கல்யாணம் வரைக்கும் சத்தியமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கவே இல்லை. இப்பதான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கோம்.

எல்லோரும் கேட்ட கேள்வி
"நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாது?"ன்னு பார்க்கிறவங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறந்தான் ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து யோசிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு நினைச்சோம். அதுக்கான நேரம் வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ரகசிய கல்யாணம் இல்லை
இது பெற்றோர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்தான். நாங்களே சொல்ல நினைக்கும் முன்பு திருமணத்திற்கு வந்தவர் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். இதனால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

ரீல் மேரேஜ், ரியல் மேரேஜ்
ரீல் கல்யாணத்தை உலகமே பார்க்கிற மாதிரி எல்லோர் முன்னாடியும் நடத்தினோம். ரியல் மேரேஜ் அம்மா அப்பா முன்னாடி மட்டும் நடந்தது.

ரொம்ப நல்லவரு…. வல்லவரு…
செந்தில் பற்றி பேசிய ஸ்ரீ ஜா, செந்தில் ரொம்ப நல்லவரு...என்று ஆரம்பிக்க, அதனாலதான் என்னைக் கல்யாணம் பண்ணியிருக்காங்க. உலகத்திலேயே என்னை மாதிரி ஒரு நல்லவன் கிடையாது என்று முடித்தார் செந்தில்.

ஸ்ரீ ஜா ரொம்ப அழகு
நாங்க ரெண்டுபேருமே ரொம்ப முன்கோபி சீரியல் மாதிரியே நிஜத்திலும் சண்டை போட்டுக்குவோம். அப்போ சமாதானப்படுத்த கேரளா ஏஞ்சல், பத்தனத்திட்டா பைங்கிளி என்றெல்லாம் கொஞ்சுவேன் என்றார் செந்தில்.

மரணத்தில் மலர்ந்த காதல்
மதுரை சீரியலில் முதன் முதலில் ஒன்றாக நடித்தோம். அப்புறம் சரவணன் மீனாட்சியில் நடிச்சப்ப ஸ்ரீஜாவுக்கு என் மீது காதல் வந்திருக்கு அதுக்கு காரணம் அவளது பெரியப்பாவின் மரணம். ஸ்ரீஜா சரவணன் மீனாட்சியில நடிக்கிறப்போ அவளுக்கு துணையா இருந்தது அவளது பெரியப்பா. ஒரு நாள் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே இறந்துட்டார்.

சுபமாய் முடிந்த திருமணம்
ஸ்ரீஜாவுக்கு சென்னையில யாரையும் தெரியாது. பெரியப்பாவை கேரளாவுக்கு எடுத்துட்டு போகணும். அவுங்களை தனியாவும் அனுப்ப முடியாது. பெரியப்பா உடலை எடுத்துக்கிட்டு அவுங்களோட டிராவல் பண்ணினேன். அப்போது நான் நடந்துகிட்ட விதம், நான் செய்த சின்ன, சின்ன உதவிகள் அவுங்க மனசுல ஆழமாக பதிஞ்சிருக்கு. அதுதான் இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு என்றார் செந்தில்.