அபியும் நானும் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.. அவரே வெளியிட்ட புகைப்படம்!
சென்னை: கர்ப்பமாக இருந்த நடிகை அகிலா தனக்கு குழந்தை பிறந்து இருக்கும் மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், நடிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அகிலா, தனது 22 வயதில் சன் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நடிகை அகிலா, பிரபலங்களை பேட்டி எடுப்பது, விளையாட்டு போட்டிகளை தொகுத்து வழங்குவது என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அப்போது தான், ராதிகா சரத்குமார் நடித்த செல்வி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து, மலர்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு, முந்தாணை முடிச்சு,அஞ்சலி, அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், அபியும் நானும் என போன்ற பல சீரியல்களில் நடித்து பெயர் எடுத்தார்.

சீரியல் நடிகை: திருமணமாகி பல ஆண்டுகள் ஆனபோதும், சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால், குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிக்காமல் இருந்த இவர் அண்மையில் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்த இவர், நான் கர்ப்பமாகி நேரத்தில், நான் கமிட்டாகி இருந்த அனைத்து சீரியல்களும் முடிந்துவிட்டன. தற்போது, என் கர்ப்ப காலத்தை ஜாலியாக அனுபவித்து வருகிறேன். நான் மகிழ்ச்சியாக இருப்பதை விட என்னுடைய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கர்ப்பமாக இருந்தால் என் நண்பர்கள் எனக்கு தினம் தினம் வளைகாப்பு நடத்துகிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் கொண்டாடுகிறார்கள் இதனால், என் பாப்பாவும் நானும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம் என்றார்.
என்ன குழந்தை தெரியுமா: தொடர்ந்து பேசிய அவர், நான் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் ஹீரோயின், வில்லி, குணசித்திர கதாபாத்திரம் என பல ரோலில் நடித்து இருக்கிறேன். இதற்கு எனக்கு துணையாக இருந்தவர் என் கணவர் தான். இதுவரை என் கணவர், என் குடும்பத்தினரை மீடியாவில் காட்டியது இல்லை. ஏன் என்றால், என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் போன்றது என்று அந்த பேட்டியில் அகிலா பேசி இருந்தார். தற்போது அகிலா, தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











