»   »  பூமிகா, அர்ச்சனா, செல்விக்கு குழந்தை பிறந்துருச்சுப்பா...

பூமிகா, அர்ச்சனா, செல்விக்கு குழந்தை பிறந்துருச்சுப்பா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

இல்லத்தரசிகளின் இப்போதைய ஹாட் டாபிக்கே அர்ச்சனாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துருச்சாமே அதுவும் பெண் குழந்தைங்க என்பதுதான். பூமிகாவுக்கும் குழந்தை பிறந்திருச்சு... மதன்தான் தன்னோட குழந்தையை கையில வாங்கினான், சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டா பூமிகா என்றும் பேசிக்கொள்கின்றனர். செல்விக்கு ஆம்பள புள்ளையாமே என்று வீட்டுக்கு வீடு இந்த செய்தியை வாய் என்ற வாட்ஸ்ஆப் மூலம் பரப்புகின்றனர். யார் இவர்கள் என்று தானே யோசிக்கிறீர்கள்? இவர் எல்லாம் டிவி சீரியலில் வரும் கதாநாயகிகள்.

வம்சம் பூமிகா

வம்சம் பூமிகா

இரவு எட்டரை மணியாகிவிட்டால் போதும் இல்லத்தரசிகள் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள வம்சம் சீரியலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு உண்டு முடித்து அடுக்களையை ஒதுக்கிவிடுவார்கள். அப்புறம் விருந்தாளிகள் போனால் கூட எதுவும் கிடைக்காது போல அந்த அளவிற்கு சீரியலில் மூழ்கிவிடுவார்கள். காரணம் பூமிகா, மைனாவாக இரட்டை வேடத்தில் கலக்கும் நடிகைதான்.

மச்சான்… மச்சான்

மச்சான்… மச்சான்

சினிமாவில் மச்சான் நடிகையாக நமீதா இருந்தால் சின்னத்திரையில் ஒரு மச்சான் நடிகை கிடைத்துள்ளார் அவர்தான் வம்சம் பூமிகா. வாய்க்கு வாய் இவர் தன் கணவரை மச்சான்... மச்சான் என்று கூப்பிட்டு மச்சான் நடிகையாகவே மாறிவிட்டார்.

குழந்தை பிறந்திருச்சுப்பா

குழந்தை பிறந்திருச்சுப்பா

கர்ப்பமாக இருக்கும் மனைவியைக் கூட கண்டுக்காத மதன், சுப்ரியா, மைனா என்று மாறி மாறி காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். ஆனாலும் கணவனை எப்படி தன் வழிக்கு கொண்டு வருகிறாள் பூமிகா என்பதுதான் கதை.

மதன் - மைனா திருமணம்

மதன் - மைனா திருமணம்

இப்போது பூமிகாவிற்கு குழந்தை வேறு பிறந்து விட்டது ஆனாலும் மைனாவை விடாமல் விரட்டி பல திருட்டுத்தனங்கள் செய்து ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டான் மதன்.

அர்ச்சனாவிற்கும் இரட்டை குழந்தை

அர்ச்சனாவிற்கும் இரட்டை குழந்தை

அட கலெக்டர் அர்ச்சனாவிற்கும் ரெண்டு பெண் குழந்தை பிறந்துருச்சுப்பா... அந்த சந்தோசத்தைக்கூட பொன்னுரங்கத்தாலே சரியா கொண்டாட முடியலையே... ஒரு குழந்தையே கேட்கறாங்களே? பொன்னுரங்கம் கொடுத்தாலும் அர்ச்சனா என்ன சொல்லுவாளோ? இதுதான் இல்லத்தரசிகளின் இப்போதைய பேச்சு.

செல்விக்கு ஆண் குழந்தை

செல்விக்கு ஆண் குழந்தை

வாணி ராணியில செல்வியோட மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு... குழந்தை பிறந்து அதை கையில வாங்குறதுக்குள்ள, அதை கலெக்டர் ஆக்குற வரைக்கும் பேச ஆரம்பிச்சிட்டாங்கப்பா. பாவம் பூங்கொடிக்குத்தான் அந்த பாக்கியம் இல்லாம போயிருச்சு என்று உச்சு கொட்டுகிறார்கள் இல்லத்தரசிகள்.

நீண்ட நாள் கர்ப்பம்

நீண்ட நாள் கர்ப்பம்

சீரியலில் கதாநாயகிகள் நீண்ட நாட்களாக கர்ப்பமாகவே இருப்பார்கள் அதை வைத்து ஒரு 300 எபிசோடவது ஓட்டி விடுவார்கள். இப்போது குழந்தை வேறு பிறந்து விட்டது இனி கேட்கவா வேண்டும். அந்த குழந்தையை எப்படி கடத்துவது என்று தான் யோசிப்பார்கள்.

பூஜா கர்ப்பம்

பூஜா கர்ப்பம்

சேதி தெரியுமா? கவுதம் மனைவி பூஜா இப்போ கர்ப்பமா இருக்கா... அதுக்கு மாமியார் வாணி கார் வாங்கி கொடுத்திருக்கா. ஆனா டிம்பிளுக்கு அது பார்த்து பொறாமையா இருக்கு. இனி என்னென்ன சதி செய்வாளோ? கூடவே சூனியக்கார கிழவி வேற இருக்காளே இனி என்ன நடக்குமே என்பதுதான் இல்லத்தரசிகளின் பேச்சாக இருக்கிறது.

English summary
TV serial actress Archana, Boomika and Selvi were delivered babies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil