Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கணவரை பிரிந்து தனிமையில் இருக்கிறேன்…. மனவேதனையில் சீரியல் நடிகை !
சென்னை : கணவரை பிரிந்து மனவேதனையில் இருப்பதாக சீரியல் நடிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ரச்சிதா. இந்த தொடர் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தளபதி 66ல் விஜய்க்கு அம்மாவாகும் பிரபல நடிகை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சரவணன் மீனாட்சி
காதலை மையமாகக்கொண்டு உருவான சரவணன் மீனாட்சி சீசன் 1ல் மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சரவணன் மீனாட்சி சீசன் 1 தொடரின் வெற்றியை அடுத்து, சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் ரச்சிதா, தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்தார். கவின் மற்றும் ரச்சிதா இருவரின் ரொமான்ஸ் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.

கருத்துவேறுபாடு
குடும்பம் , சீரியல் என பிஸியாக இருந்த ரச்சிதா, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த 1ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இருவரையும் சமாதானப்படுத்த இரு வீட்டாரும் முயன்ற போதும் இருவரும் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவியபோதும் இருவரும் இதுகுறித்து எந்தவிதமாக கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தனிமையில் இருக்கிறேன்
இந்நிலையில், நடிகை ரசித்தா தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை என்னும் தொடரில் நடித்து வருகின்றார். இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ரச்சிதா, இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை வளர்க்க போராடும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரமும் தனது சொந்த வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும் தற்போது தனிமையில் மனவேதனையோடு இருப்பதாக கூறியுள்ளார்.
Recommended Video

ரசிகர்கள் அதிர்ச்சி
மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் மனபக்குவமும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ரச்சிதாவின் இந்த பதிலால்வ இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரச்சிதா கன்னட திரைப்படம் ஒன்றில் நடிகரும் இயக்குனருமான குருபிரசாத் நடிக்கும் கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்