சன் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் 'பூவரசி' ராதிகா ப்ரீத்தி...எந்த சீரியலில் தெரியுமா?

சென்னை : கன்னடத்தில் வெளியான ராஜ் லவ்ஸ் ராதே என்ற படத்தின் மூலம் நடிகையானவர் ராதிகா ப்ரீத்தி. தமிழில் 2019 ம் ஆண்டு ரிலீசான எம்பிரான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.அதற்கு பிறகு பட வாய்ப்புக்கள் கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றார்.

Serial actress Radhika Preethi come back to Sun tv through upcoming new serial

சன் டிவியில் முழுக்க முழுக்க புது முகங்களுடன் களம் இறக்கப்பட்ட பூவே உனக்காக சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ராதிகா ப்ரீத்தி. இளைஞர்களின் ஃபேவரைட் சீரியல் வரிசையில் குறுகிய காலத்திலே இடம் பிடித்தது பூவே உனக்காக.

இந்த சீரியலில் பூவரசி கேரக்டரில் ஹீரோயினாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்தார். இவருக்கு ஜோடியாக கதிரவன் என்ற கேரக்டரில் நடிகர் அருண் நடித்தார். அதே போல் கதிரின் காதலியாக, பூவரசியின் தோழியாக கீர்த்தி ரோலில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நடித்தார்.

இந்த சீரியல் முக்கிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் முதலில் ஜோவிதா சீரியலை விட்டு விலகினார். அடுத்து அருண் விலகினார். அவருக்கு பதில் நடிகர் அசீம் என்ட்ரி கொடுத்தார். பூவரசியாக தொடர்ந்து ராதிகா ப்ரீத்தி நடித்து வந்தார்.

பிறகு அவரும் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் என்ன காரணத்திற்காக சீரியலில் இருந்து விலகினார் என அவர் தெரிவிக்கவில்லை. இதனால் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருந்த சீரியல் மொத்தமாக அடி வாங்கியது.இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பூவே உனக்காக சீரியல் பல காரணங்களால் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

இதன் பின்பு ஜோவிதா மீண்டும் சன் டிவியில் அருவி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அருண், விஜய் டிவி பக்கம் சென்று விட்டார். இப்போது பூவரசி - ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன் டிவி சீரியலில் மூலம் கம்பேக் கொடுக்க போகிறார்.விரைவில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள புதிய சீரியலில் ராதிகா லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் பெரிய அளவில் வர முடியாவிட்டாலும் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தையும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார் ராதிகா ப்ரீத்தி. இவர் நடிக்கும் சீரியல் எப்போது துவங்க போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X