தமிழில் வில்லி மலையாளத்தில் ஹீரோயின்.. சீரியல் நடிகை ரிந்தியா!
தமிழ் சீரியல்களைப் போல மலையாள சீரியல்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் நடிகை ரிந்தியா.
திருமதி செல்வம் தொடரில் வில்லியாக நடித்த ரிந்தியா தற்போது குறிஞ்சிமலர் தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சென்னையில் மட்டுமல்லாது கேரளாவிற்கும் சீரியலில் நடிக்க பறந்து சென்று வருகிறார்.

சின்னத்திரையில் பிஸி
குங்குமபூ தொடரில் அறிமுமான ரிந்தியா இப்போது பிசியான சின்னத்திரை நடிகை. திருமதி செல்வம் மூலம் இல்லத்தரசிகளிடம் நிறைய திட்டு வாங்கினார் ரிந்தியா.

மலையாளத்தில் ஹீரோயின்
தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடர் மலையாளத்தில் பாக்யலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதில் ரிந்தியா ஹீரோயினாக நடிக்கிறார்.

ரொம்ப ஈஸி
தமிழ்நாட்டைப்போலவே கேரளாவிலிலும் சீரியலுக்கு இப்போது மவுசு கூடியிருக்கிறது. ஒரே நாளில் இரண்டு முன்று எபிசோட்களை எடுத்து விடுகிறார்கள். அதனால் மலையாள சீரில்களில் நடிப்பது எளிதாக இருக்கிறது என்கிறார் ரிந்தியா.

இருமாநில ரசிகர்கள்
தமிழ், மலையாளம் இரண்டு மொழி ரசிகர்களின் உள்ளத்தில் இடம்பெற வேண்டும் என்பதே லட்சியம்" என்கிறார் ரிந்தியா.

மாறி மாறி பறக்கிறார்
தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் நடிப்பதால் மாதத்திற்கு 15 நாட்கள் சென்னையிலும் 15 நாட்கள் கேரளாவிலுமாக பிரித்து கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

சீரியலே போதுமாம்!
சீரியலில் நடிப்பதே சந்தோசம் என்று கூறும் ரிந்தியாவிற்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால் அதை தவிர்த்துவிட்டதாக கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











