»   »  மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி நடிக்க ஆசை: சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்

மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி நடிக்க ஆசை: சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ஹீரோயின் துளசியை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இன்றைக்கும் அவர் சன் டிவியில் அபூர்வராகங்களில் பவித்ராவாக வந்து இல்லத்தரசிகளிடம் பேசி விட்டு செல்கிறார்.

அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலில் கவுரியாக மாமியாரை எதிர்க்கும் மருமகளாக நடிக்கிறார். என்னதான் ஹீரோயினாக நடித்தாலும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போல பைத்தியமாக நடிக்க வேண்டும் என்பது ஸ்ருதியின் கனவாம்.

சன் டிவியில் அபூர்வ ராகங்கள் , ஜீ தமிழ் டி.வியில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ராஜ்.

மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாள, கன்னட படங்களிலும் நடித்திருந்தாலும் ஸ்ருதியை தமிழக ரசிகர்களிடையே அடையாளம் காட்டியது தென்றல் சீரியல்தான்.

விஜய் டிவியின் 'ஆபீஸ்' ஸ்ருதியை வேறு கோணத்தில் காட்டியது. 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்', 'அபூர்வராகங்கள் ' என நடித்து வருகிறார் ஸ்ருதி.

சாக்லேட் காதலி

சாக்லேட் காதலி

எனக்கு பாட்டுக் கேட்கிறது ரொம்ப பிடிக்கும். ஷாப்பிங் பண்றது பிடிக்கும். நிறைய சாக்லேட் சாப்பிடுவேன். டயட் என்பது எனக்கு கிடையவே கிடையாது என்கிறார் ஸ்ருதி ராஜ்.

புடவை கட்ட தெரியாது

புடவை கட்ட தெரியாது

எனக்கு குர்தி அணிவதுதான் ரொம்ப பிடிக்கும். புடவை கட்ட தெரியாது. புடவை கட்டி நடிப்பது போன்ற சீன்களில் அதிக நேரம் எடுக்கம் என்கிறார் ஸ்ருதி ராஜ்.

ஷாருக்கான் - கஜோல்

ஷாருக்கான் - கஜோல்

பாலிவுட் எவர்கிரீன் ஹீரோ ஷாருக்கான் கஜோல் ரொம்ப பிடிக்குமாம். நடிக்கவே தெரியாத என்னோட அம்மா, அப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்கிறார் ஸ்ருதி ராஜ்.

மூன்றாம் பிறை ஸ்ரீதேவி

மூன்றாம் பிறை ஸ்ரீதேவி

தென்றலில் பாசிட்டிவான கதாபாத்திரமா நடித்தால் மக்கள் மனசுல நான் அப்படியே பதிஞ்சுட்டேன். ஆனா எனக்கு 'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவி மாதிரியான பைத்தியமா நடிக்கணும்ன்னு ஆசை.

சின்னத்திரையை நேசிக்கிறேன்

சின்னத்திரையை நேசிக்கிறேன்

நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ சினிமாவில் நடிக்க பிடிக்கவில்லை. சின்னத்திரையில் நேசித்து நடித்து வருகிறேன். அவுட்டோர் ஷூட்டிங் இருக்காது. காலையில் படப்பிடிப்புக்கு வந்தால் மாலையில் வீட்டுக்கு போய்விடலாம்.

சீரியல் உறவினர்கள்

சீரியல் உறவினர்கள்

ஆபீஸ் போய் வரும் உணர்வே இருக்கும். ஒரே சீரியலில் ஆண்டு கணக்கில் நடிப்பதால் உடன் நடிப்பவர்கள் உறவினர்களாகவே ஆகிவிடுகிறார்கள். சினிமாவில் இதெல்லாம் இருக்காது என்கிறார் ஸ்ருதி ராஜ்.

English summary
Shruthi Raj is an television actress. She acted in a few Tamil films including Kadhal Dot Com and Jerry before moving on to act in TV serials. She is known for her roles in the recent TV series Thendral, Office and Aburva ragangal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil