TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
சந்தோஷி இரட்டை வேடத்தில் நடிக்கும் பாவமன்னிப்பு
ஜீ தமிழில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் 'பாவமன்னிப்பு.' இந்த தொடரில் நடிகை சந்தோஷி இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
தந்தை-மகள் பாசத்தை பின்னணியாக கொண்டது பாவமன்னிப்பு தொடர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.
இளவரசி, சூரியபுத்ரி, தொடர்களில் பிசியாக நடித்து வரும் சந்தோஷி. இந்த தொடரில் அன்பான அம்மா ஆணவம் பிடித்த மகள் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம்.
பாசமான அப்பா – மகள்
ஜெகதீஷ் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். மக்களால் போற்றப்படும் நல்ல மனிதர். மகளால் நேசிக்கப்படும் பாசமான அப்பா. ஆனால், ஜெகதீஷ் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் கடந்த கால வாழ்க்கையானது மகளுக்கும் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது.
அம்மா – மகள்
இந்த ரகசியம் அறிந்த ஒரே பெண் ஜெகதீஷின் மனைவி மட்டுமே. அவள் தற்போது உயிருடன் இல்லை. மகளும் தன் தந்தையின் வாழ்க்கையில் இப்படி ஒரு ரகசியம் இருக்கிறது என்பதை அறியாதவளாய் தந்தை மீதான அன்பை தொடர்கிறாள்.
தந்தையை வெறுக்கும் மகள்
ஒருநாள் தந்தை பற்றிய அந்த பயங்கர உண்மை மகள் பாலாவுக்கு தெரிய வருகிறது. அதன்பின் பாலாவின் வாழ்க்கையும் திசை திரும்புகிறது. தன் தந்தை மட்டுமே உலகம் என நம்பி வாழ்ந்த பாலாவை தந்தையின் கடந்த கால கசப்பு சம்பவங்கள் நிலைகுலைய வைக்கிறது.
பாவமன்னிப்பு
இதன் தொடர்ச்சியாக தந்தை-மகள் பாச உறவு என்ன ஆகிறது? தந்தைக்காக மகள் இனி செய்யப் போவது என்ன? திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர். பிப்ரவரி 10ம் தேதி திங்கள் முதல் தினசரி இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது பாவமன்னிப்பு.
சினிமாவில் சந்தோஷி
சினிமாவில் அறிமுமான சந்தோஷி சரியான வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரைக்கு வந்து இங்கு பிசியாகிவிட்டார். இப்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.
தமிழ் படங்களில் வாய்ப்பு
தெலுங்கில் செகண்ட் ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சந்தோஷி விரைவில் தமிழ் படங்களிலும் நடிக்க இருக்கிறார். சினிமா வேண்டாம் என்று எப்போதும் ஒதுங்கியதில்லை. ஹீரோயினாவும் நடிக்க முடியாத, அக்கா அண்ணி கேரக்டரிலும் நடிக்க முடியாத நிலையில் இருந்ததால் சினிமாவை விட்டு சிறிது விலகி இருந்தேன் என்கிறார்.
தெலுங்கு படங்களில்
தெலுங்கில் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற கேரக்டர்கள் அமைவதால் நடிக்கிறேன். மன்னன் படத்தில் விஜயசாந்தி மேடம் நடித்த மாதிரி ஒரு கேரக்டரில் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் தமிழிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒரு நாள் இரண்டு நாள் கால்ஷீட்டில ஒரு காட்சி, இரண்டு காட்சியில் நடிக்க மாட்டேன்.
சீரியலை கைவிட மாட்டேன்
ராதிகா மேடத்துக்கு பிறகு சின்னத்திரையில் நான்தான் இரட்டைவேடம் போடுகிறேன் என்று நினைக்கிறேன். இதனால் எனது பொறுப்பு அதிகரித்திருக்கிறது.
சினிமாவில் பிசியாக நடித்தாலும் சீரியலை கைவிட மாட்டேன். காரணம் எனக்கு கைகொடுத்தது சீரியல்கள்தான்" என்கிறார் சந்தோஷி.