»   »  சீரியல் வில்லிகளும் நல்லவங்கதான் பாஸ்... சொல்வது கல்யாண பரிசு ஸ்ரீதேவி

சீரியல் வில்லிகளும் நல்லவங்கதான் பாஸ்... சொல்வது கல்யாண பரிசு ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் வில்லிகளைப் பார்த்து திட்டாதீங்க பெண்களே நாங்களும் ரொம்ப நல்லவங்கதான் என்று பாவமாய் சொல்கிறார் வாணி ராணி, கல்யாண பரிசு வில்லி ஸ்ரீதேவி.

தங்கம் சீரியரில் ரம்யா கிருஷ்ணன் தங்கையாக நடித்த ஸ்ரீதேவி, வாணி ராணியின் மாமன் மகனை திருமணம் செய்ய பேயாக வந்தார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு சீரியலில் தோழியின் கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தோழியை கொலை செய்யும் அளவிற்கு வில்லத்தனம் செய்து சிறையில் இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜி தமிழ் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்'சீரியலில் காக்கிச்சட்டையில் வந்து நல்ல பெண்ணாய் நடிக்கிறார். அதெல்லாம் ரீலுக்காகத்தான் நான் உண்மையிலேயே ரொம்ப சாதுவான பெண் என்கிறார் ஸ்ரீதேவி

தனுஷ் தங்கச்சி

தனுஷ் தங்கச்சி

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரூபாவின் மகள்தான் ஸ்ரீதேவி. அம்மாவும், மகளுமாய் இப்போது சீரியலில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். பி.எஸ்ஸி படிக்கும் போது தற்செயலா கிடைத்த வாய்ப்பினால் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ் தங்கையாக நடித்தாரம்.

சீரியல் அறிமுகம்

சீரியல் அறிமுகம்

சன் டி.வியில செல்லமடி நீ எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்த ஸ்ரீதேவிக்கு, 'கிழக்கு கடற்கரை சாலை படத்தில் வாய்ப்பு கிடைத்த நடித்தாராம்.

ரொம்ப படிப்பாளி

ரொம்ப படிப்பாளி

நடிப்போடு படிப்பையும் விடாமல் இருக்கிறார் ஸ்ரீதேவி. பி.எஸ்ஸி. நியூட்ரிஷியன் அண்ட் டயடிக்ஸ், எம்.பி.ஏ., ஹெச்.ஆர், எம்.எஸ்ஸி., சைக்காலஜி, எம்.ஏ., லிங்விஸ்டிக்ஸ் படித்திருக்கிறார். கிரிமினாலஜி சார்ந்த படிப்பை படிக்கப் போகிறாராம்.

நடிப்போடு படிப்பும் அவசியம்

நடிப்போடு படிப்பும் அவசியம்

நடிப்பைத் தாண்டி, டெக்னிக்கலாவும் இப்போ பல விஷயங்களைக் கத்துட்டு இருக்கேன். தயாராகிட்டு இருக்குற ‘இரவில்' என்ற படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக நடித்துக்கொண்டிருக்கிறாராம். மீடியா ஃபீல்டில், வாய்ப்பு குறையும் சமயத்துல என்னோட படிப்பு சார்ந்த துறைக்கு வேலைக்குப் போயிடலாம் என்பதுதான் ஸ்ரீதேவியின் திட்டம்.

விலங்குகளுக்கு சேவை

விலங்குகளுக்கு சேவை

நடிப்பு, படிப்பைத் தாண்டி பிராணிகள் நல அமைப்பு ஒன்றில் வாலன்டியரா சேவை செய்யும் ஸ்ரீதேவி வீட்டில் இப்போது நான்கு நாய்கள், நிறைய பறவைகள் வளர்க்கிறாராம். வாழ்க்கை சந்தோஷமாவும், பிஸியாவும் போயிட்டு இருக்கு என்கிறார்.

English summary
Kalyanaparisu villie Sridvei has said that TV serial villies are basically good.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil