twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு... பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்

    By Mayura Akilan
    |

    சென்னை: யாரையும் நம்பி வீட்டுக்குள்ள சேர்க்க முடியலைப்பா... எப்ப எந்த நேரத்தில நமக்கே குழி தோண்டுவாங்கன்னு தெரியலை. அந்த அளவுக்கு சொந்தக்காரங்க யாரு? சோத்துல மண் அள்ளி போடுறவங்கன்னு கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கூட இருந்தே குழி பறிக்கிறாங்கப்பா... என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர் இல்லத்தரசிகள். எல்லாம் டிவி சீரியல்கள் பார்ப்பதனால் ஏற்பட்ட எபெக்ட்தான்.

    காலையில் 9 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை டிவி சீரியல்களை விடாமல் பார்க்கும் பெண்கள் சிலர் சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே சிலர் ஆகிவிடுகின்றனர்.

    டிவி சீரியலைப் பார்த்து சிலரோ கவிதை கூட எழுத ஆரம்பித்து விட்டனர்.

    24 மணி நேர வரையறை எல்லாம் கடந்த
    கால சுழற்சி நீ.
    வேண்டா விருந்தாளியாய் விளம்பரம்.
    வந்த விருந்தாளிக்கு பாரா முகம்.
    நடு வீட்டில் ஒப்பாரி வைக்கும் உன் சீரியல்கள்.
    நீ வீட்டுக்குள் வந்து
    படிக்கும் பழக்கத்தை
    வீட்டுக்கு அனுப்பினாய்
    ஆக, நீ நல்லவனா, கெட்டவனா?
    கேட்கிறான்,
    உன்னால் முட்டாள் ஆகி,
    உன்னை 'முட்டாள் பெட்டி' என அழைக்கும்
    முட்டாள் பொது சனம்.

    என்று கவிதையாய் எழுதினாலும் டிவி பெட்டி மனிதர்களை முட்டாள்கள் ஆக்குவது என்னவோ உண்மைதான்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் வீட்டுக்கு வரும் நண்பர்களை, உறவினர்களை வரவேற்று மகிழ்ந்தது அந்தக் காலம். இது போன்ற நாள்களில் தொலைக்காட்சி பெட்டி முன் பழியாய்க் கிடப்பதால் யாரும் வந்துவிடக் கூடாது என எண்ணுவது இந்தக் காலம்.

    உறவுப் பாலத்தை உருக்குலைக்கச் செய்வது இந்த முட்டாள் பெட்டிதான். அதற்குக் காரணம் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். எந்த சீரியலாவது கொஞ்சம் சந்தோசப்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மருமகளை கொலை செய்யத் துடிக்கும் மாமியார். நாத்தனாரை வீட்டை விட்டு துரத்த நினைக்கும் அண்ணி, கணவனை கழுத்த நெரித்து கொல்ல நினைக்கும் மனைவி என பல சீரியல்கள் இன்றைக்கு வீட்டின் வரவேற்பரைக்கு வந்து செல்கிறது.

    சன் டிவி சீரியல்கள் சுத்த மோசம் என்றால், அதை விட்டு ஜீ சேனலுக்கு மாறினால் அதை விட படு மோசமாக இருக்கிறது. இரவில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் காலை 9 மணிக்கே மறு ஒளிபரப்பு செய்கின்றனர்.

    உறவாடி கெடு

    உறவாடி கெடு

    தொடரின் பெயர் லட்சுமி வந்தாச்சு... ஆனால் வசனங்கள், சீன்கள் எல்லாமே வில்லத்தனம்தான். தம்பியின் மனைவியை வீட்டை விட்டு துரத்த, விஷம் குடிப்பது போல உறவாடி கெடுக்க நினைக்கிறாள் அண்ணி. அதற்காக எந்த வித ரிஸ்கும் எடுக்க நினைப்பேன். பகையாளி குடும்பத்தை உறவாடி கெடுத்து, நம்பும் நேரத்தில் நடு மண்டையில் தட்டுவேன் என்று வசனம் பேசுகிறாள் வில்லை.

    மருமகளை பிரிக்க நினைக்கும் மாமியார்

    மருமகளை பிரிக்க நினைக்கும் மாமியார்

    இதேபோல மகன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை, வீட்டை விட்டு துரத்த, எத்தனையோ திட்டங்களைப் போட்டு கொலை வரைக்கும் போய், இப்போது இருவருக்கும் விவாகரத்து வாங்கித்தருவதற்காக திட்டமிடுகிறாள் மாமியார்.

    நடுத்தெருவில் நிறுத்துவேன்

    நடுத்தெருவில் நிறுத்துவேன்

    சொத்துக்கு ஆசைப்பட்டு கணவனையே நடுத்தெருவில் நிறுத்துவேன் என்று வசனம் பேசுகிறாள் பிரியசகி சீரியல் வில்லி. கொலை செய்யக்கூட தயங்க மாட்டேன் என்று கூறும் அந்த வில்லி, கணவனை எப்படி கொலை செய்வது என்று கற்பனை செய்து பார்க்கிறாள்.

    நோய்களின் கூடாராம்

    நோய்களின் கூடாராம்

    நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணிநேரம் தொடர்ந்து டிவி பார்ப்பதால், புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு உள்ளிட்ட 8 நோய்கள் ஏற்பட்டு அமெரிக்காவில் ஆண்டுதோறும் பலர் மரணமடைந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம், இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    டிவி பார்ப்பதால் மரணம்

    டிவி பார்ப்பதால் மரணம்

    டிவி பார்க்கும்நேரத்திற்கும், மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கும் தொடர்பு உள்ளது. தினமும் 1 மணிநேரம் டிவி பார்ப்பவர்களுக்கும், மற்றும் 3 முதல் 4 மணிநேரங்கள் டிவி பார்ப்பவர்களை ஒப்பிடுகையில், அதிகநேரம் டிவி பார்ப்பவர்களுக்கு, இந்த நோயின் காரணமாக மரணம் ஏற்படுவது 15 சதவீத அதிக வாய்ப்பு உள்ளது.

    குறையும் உடல் உழைப்பு

    குறையும் உடல் உழைப்பு

    டிவி பார்க்கும்நேரத்தில், நமது உடல் உழைப்பு குறைவது மட்டுமல்லாது, அப்போது அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்வதால், நமது உடல் நலன் மேலும் பாதிப்பிற்குள்ளாகிறது.

    மன உளைச்சல் அதிகரிக்கிறது

    மன உளைச்சல் அதிகரிக்கிறது

    அமெரிக்க ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், டிவி சீரியலைப் பார்த்து பார்த்து நாள் தோறும் கண்ணீர் விட்டு அழுவதோடு, மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள், இரவில் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். இது குடும்பத்திலும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்னவோ உண்மைதான்.

    English summary
    Almost all the serials in Tamil channels are teaching all ill lessons to the viewers and rusting the minds
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X