ஆரம்பிக்கலாமா?... கலக்கலாக வெளியான பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ

சென்னை : அனைவரும் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு துவங்கப்பட உள்ளது. விஜய் டிவி.,யில் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்ட விழாவாக துவக்கப்பட உள்ளது.

சுமார் 5 மணி நேர நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ள பிக்பாஸ் துவக்க விழா இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

லேட்டஸ்ட் ப்ரோமோ

லேட்டஸ்ட் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தொடர்ந்து அசத்தல் ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது விஜய் டிவி. இதில் லேட்டஸ்டாக, ஆரம்பிக்கலாமா என கேட்டு ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இதில் வான வேடிக்கைகள் முழங்க, பிக்பாஸ் செட்டின் மேல் கமல் நிற்பது போன்ற காட்சியுடன் இந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

இந்த ப்ரோமோவை கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். அனல் பறக்கும் எமோஜிக்களால் கமெண்ட் பகுதியை நிரப்பி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருப்பதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர். சிலர் கிண்டலாக, வேணாம்னு சொன்னா மட்டும் விட்றவா போறீங்க. ஆரம்பிங்க என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

அன்சீனை பார்க்க ஆர்வம்

அன்சீனை பார்க்க ஆர்வம்

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பு செய்யப்படும். இது தவிர தினம் நடக்கும் பிக் பாஸ் நிகழ்வுகள் அன்சீன் காட்சிகளுடன் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த அன்சீன் எபிசோட்களை பார்ப்பதற்கே அதிகமான பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாளை பிரம்மாண்ட விழா

நாளை பிரம்மாண்ட விழா

ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் எப்போது துவங்கும், யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் விடாமல் கேட்டு வந்தனர். பிக் பாஸ் பற்றி பல விதமாக தகவல்களும் பரவி வந்தன. இந்நிலையில் இவற்றிற்கு முடிவு கட்டும் விதமாக அக்டோபர் 3 ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை துவங்க உள்ளதாக விஜய் டிவி சமீபத்தில் அறிவித்தது.

மாற்றப்பட்ட விதிகள்

மாற்றப்பட்ட விதிகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிகாக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டின் அமைப்பு, விதிகள் என அனைத்தும் இந்த முறை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டை போல் இந்த சீசனும் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. போட்டியாளர்களுக்கும் கொரோனா விதிகளின் படி பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே வீட்டிற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இது தான் போட்டி

இது தான் போட்டி

அடுத்த 100 நாட்களுக்கு வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வசிக்க வேண்டும். அங்கு போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்படும். இந்த டாஸ்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், ரசிகர்களின் மனதை கவர்ந்து அதிக ஓட்டுக்களை பெற்று கடைசி வரை தாக்குப்பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, பிக்பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் வின்னர் பட்டத்தையும், கோப்பையையும் வெல்வார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X