மிஞ்சி போனால் மரணம் என்ற போது.. ஷாரிக் ஹாசன் மனைவி மரியா போட்ட திடீர் போஸ்ட்டை பார்த்தீங்களா!
சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிஃபர் திருமணம் கடந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சூழ, இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திருமணத்தைத் தொடர்ந்து, இருவரும் தொடர்ச்சியான தேனிலவு பயணங்களை மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், கணவர் ஷாரிக் உடன் இணைந்து நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு மரியா போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தன்னை விட மூன்று வயது மூத்தவரான மரியாவுக்கு 9 வயதில் மகள் இருந்த நிலையிலும் ஷாரிக் மணந்தது மிகப்பெரிய விவாதங்களை கோலிவுட்டில் ஏற்படுத்தியது. ஷாரிக்கின் பெற்றோரும், பிரபல நட்சத்திர தம்பதிகளுமான நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஆகியோர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தனர். பிக் பாஸ் போட்டியாளரான ஷாரிக்குக்கு திருமணம் ஆகாத பெண் ஏதும் கிடைக்கவில்லையா? என்கிற கேள்விகளும் விமர்சனங்களும் கிளம்பின.

திருமணத்திற்குப் பிறகு ஷாரிக் அளித்த பேட்டியில், தனது திருமணம் எளிமையாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும், ஆனால் தனது பெற்றோர்கள் அதை மிகவும் பிரம்மாண்டமாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும், அவை கொடுக்காத பிரபலத்தை இந்தத் திருமணம் ஷாரிக்கிற்கு பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
காதல் தான் முக்கியம்: மரியாவை ஒரு வருடத்திற்கும் மேலாகத் துரத்தி துரத்தி காதலித்து ஷாரிக் திருமணம் செய்துள்ளார். மரியா தன்னை விட மூன்று வயது மூத்தவர் என்பதும், ஏற்கெனவே திருமணமாகி ஒன்பது வயது மகளுக்குத் தாயாக இருக்கிறார் என்பதும் தெரிந்தும், ஷாரிக் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் மரியாவை மணந்தார்.
இது அவர்களின் திருமணத்திற்கு பெரும் வரவேற்பையும், அதே சமயம் சில விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. வரதட்சணைக்காகவே ஷாரிக் மரியாவை திருமணம் செய்ததாக சில தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், திருமணத்திற்கு முன்னும் பின்னும் இந்தத் தம்பதியினர் தொடர்ந்து தங்களுக்கு காதல் தான் முக்கியம் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
மிஞ்சி போனால் மரணம்: ஷாரிக் தனது மகள் தன்னுடைய உயரத்துக்கு வளர்ந்துவிட்டார் என சமீபத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது தனது மனைவியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். ஷாரிக் மற்றும் மரியா கூட்டாக சேர்ந்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "ஆனால் மிஞ்சி போனால் மரணம் என்ற போது.. வாழ்க்கை வாழ வெக்கப்படலாமா..!" என செம தத்துவமான கேப்ஷனை போட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











