சினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை!
சென்னை: முன்பெல்லாம் மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பார்கள். ஆனால் இன்றோ வெள்ளித்திரையில் உள்ளவர்களையெல்லாம் சின்னத்திரையில்தான் அதிகம் பார்க்க முடிகிறது.
சின்னத்திரையும் வெள்ளித்திரைக்கு நிகராக இன்று பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல், இல்லத்தரசிகளும் முதியவர்களும் மட்டுமே பார்வையாளர்களாக இருந்த சின்னத்திரை இன்று குழந்தைகள், இளைஞர்களையும் தன்னை நோக்கி இழுத்துள்ளது.
வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காதவர்களோ அல்லது அங்கிருந்து ரிடையர்ட் ஆனவர்கள் செல்லும் இடமாக சின்னத்திரை இருந்தது ஒரு காலம்.

சந்தானம்- சிவகார்த்திகேயன்
சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, பிரியா பவானி சங்கர், சின்மயி, சித் ஶ்ரீராம், இப்போது இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ள சிறுவன் கப்பீஸ் பூவையர் வரை சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும், தங்களது திறமையினால் வெள்ளித்திரையிலும் பலர் கோலோச்சியுள்ளனர்.

புதிய அடையாளம்
அதேபோல் , சின்னத்திரை என்றால் மெகா சீரியல்களும், செய்தியும் மட்டுமே இருக்கும் என்றிருந்த நிலையில், ரியாலிட்டி ஷோக்களின் வருகை சின்னத்திரைக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தது.

ரசிகர் கூட்டம்
வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு உள்ளது போல், இன்று சின்னத்திரை ரசிகர்களுக்கென்று தனி ரசிகர்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.! வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருவதே வழக்கமாக இருந்த நிலையில், பிரபலமாக இருக்கும் நட்சத்திரம் சின்னத்திரை தொகுப்பாளர் ஆவது, சின்னத்திரையின் வளர்ச்சியையே காட்டுகிறது.

முன்னணியினர் படையெடுப்பு
முன்னணி நடிகர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக இருப்பது இந்தியில் சாதாரணமாக இருந்தாலும், தென் இந்தியாவிற்கு இது புதிது. சூர்யா, கமல், விஷால், வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் சின்னத்திரையை நோக்கி படையெடுத்திருப்பது, அதன் வளர்ச்சியையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











