»   »  விஜய் டிவியில் மீண்டும் கலக்கப் போவது யாரு... புரோமோவில் கலக்கிய சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் மீண்டும் கலக்கப் போவது யாரு... புரோமோவில் கலக்கிய சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சிவகார்த்திக்கேயன், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு 5வது சீசனுக்கான புரமோசன் நிகழ்ச்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜய் டிவியின் பிரபலமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியளார்கள் தேர்வு நிகழ்ச்சி பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது. வரும் 26ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

பிரபல நட்சத்திரங்கள்

பிரபல நட்சத்திரங்கள்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திக்கேயன், ஈரோடு மகேஷ், ரோபோ ஷங்கர், மதுரை முத்து உள்ளிட்டோர் இன்றைக்கு தமிழ் சினிமாவில் பிரபலங்களாக உயர்ந்துள்ளனர்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனின் அறிமுகம் விஜய் டிவிதான். கலக்கப் போவது யாரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, வெற்றி பெற்று பின்னர் அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக உயர்ந்தார்.

சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன் நடத்திய அது இது எது நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையில் இருந்து மெரினா திரைபடத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றியால், இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய ரஜினி முருகன் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் விரைவில் வெளிவர உள்ளது.

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

தன்னை அறிமுகப்படுத்தியவர்களையும், வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் இருக்கிறார் சிவகார்த்திக்கேயன். தான் அறிமுகமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இப்போது பிரபலப்படுத்த அந்த நிகழ்ச்சியின் புரோமோவில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

கலக்கப்போவது யாரு

கலக்கப்போவது யாரு

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் மீண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அந்த டிவி பக்கம் போகவே மாட்டார்கள். ஆனால் சினிமாவில் ஹீரோவான பின்னரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் சிவகார்த்திக்கேயன். அதேபோல தான் அறிமுகமான நிகழ்ச்சியைப் பற்றிய புரோமோவில் நடித்துக் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வளர்த்து விட்ட நிகழ்ச்சி

தாடி பாலாஜி, சேது, ஈரோடு மகேஷ், பிரியங்கா ஆகியோர் இந்த புரோமாவில் நடித்துள்ளனர். நம்மள வளர்த்து விட்ட நிகழ்ச்சி இது. உங்க விஜய் டிவியில மறுபடியும் ஒளிபரப்பாகிறது பார்க்க மறக்காதீங்க என்று கூறுகிறார் சிவகார்த்திக்கேயன். அப்போ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் வருவார் சிவகார்த்திக்கேயன்.

English summary
Kalakkapovadhu Yaaru Season 5 starts from 26th July 2015 Sunday at 2 PM on Vijay TV

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil