»   »  முதல்ல ஓவியா... அப்புறம் ஜூலி, இப்போ ரைசா மூணு பேரையும்...! - சினேகனின் அசிங்கமான கமெண்ட்

முதல்ல ஓவியா... அப்புறம் ஜூலி, இப்போ ரைசா மூணு பேரையும்...! - சினேகனின் அசிங்கமான கமெண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸில் தன் பிக் பிரதராகக் காட்டிக் கொள்ளும் சினேகனின் செயல்கள் மிகுந்த அருவருப்பைத் தருவதாக உள்ளன. ஜூலி, காயத்ரியை விட மிக மோசமாக நடந்து கொள்பவராக மாறியுள்ளார் சினேகன். பெண்களைத்தான் வம்பளப்பவர்களாகக் காட்டுவார்கள். ஆனால் அவர்களை விட மோசமாக 'பொரணி' பேசுகிறார் இந்த சினேகன்.

நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் 29வது நாள் என்ன நடந்தது என்பதைக் காட்டினார்கள். நமீதா வெளியேறிய பிறகு, வம்பு ராணி காயத்ரி, சினேகன் மற்றும் சக்தி ஆகியோர் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேறு என்ன... எல்லாம் ஓவியாவுக்கு எதிரான வம்புதான்.

Snehan's indecent comment on Oviya, Raisa and Julie

ஜூலி மீது 50 சதவீத தவறு என்றால், அதே அளவு தவறு ஓவியா மீதும் உள்ளது என்றார் காயத்ரி. கமல் ஹாஸன் காட்டிய வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதும், அதில் ஓவியாவுக்கு எதிராக எதுவுமே இல்லாததால், சந்தேகத்துக்குரியது என்பதும் 'வீடியோ எக்ஸ்பர்ட்' காயத்ரியின் புதிய கண்டுபிடிப்பு. ஸ்க்ரிப்ட் அப்படி போலிருக்கிறது.

அப்போது சினேகன் அடித்த கமெண்ட் ரொம்ப அநாகரிகமானது. "இந்த ஆரவை நம்ப முடியாது. அவன் ப்ளான் பண்ணி ஒவ்வொரு பொண்ணா தன் வலைல வீழ்த்தறான். முதல்ல ஓவியாவ புடிச்சான். அடுத்த வாரம் ஜூலி கூட நெருக்கமா இருந்தான். இப்போ ரைசா... ஒரு வேளை மூணு பேரையும்... அவன் இதே வேலையா இருப்பான் போல...," என்று கூற காயத்ரியும் வாசுவும் சிரித்தார்கள்.

மூன்று பெண்களை பாலியல் ரீதியாக ஒரு ஆணுடன் தொடர்புபடுத்தி சினேகன் பேசிய போதும், மற்ற இருவரும் அதை ரசித்து சிரிக்கிறார்கள்.

ஏற்கெனவே ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னடா செய்றீங்க? என்று கேவலமாகத்தான் பேசி வருகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது சினேகனின் கமெண்டுகள்.

English summary
Big Boss participant Snehan's indecent comment on Oviya, Julie and Raisa became controversy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil