»   »  அட அசிங்கம் புடிச்சவங்களா… அக்கா தங்கச்சிய கூடவா விடமாட்டீங்க?

அட அசிங்கம் புடிச்சவங்களா… அக்கா தங்கச்சிய கூடவா விடமாட்டீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபாயகரமான படங்களையோ, வீடியோ பதிவுகளையோ போடும் போது, கர்ப்பிணிகள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் பாதிப்பு உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று ஸ்லைடு போடுவார்கள். இனி சீரியல் ஒளிபரப்பும் முன்பும் அப்படி போட்டால் நல்லது என்று கூட தோன்றுகிறது.

நீரிழிவு, மனஅழுத்தம், ரத்தக்கொதிப்பு நோய் இல்லாதவர்களுக்குக் கூட இனி சீரியல்களைப் பார்த்தால் வந்து விடும் என்பதுதான் உண்மை. அந்த அளவிற்கு வன்மம், கூட இருந்தே குழிபறித்தல் போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின்றன.

மாமியார் - மருமகள், அண்ணி - நாத்தனார், அண்ணி - கொழுந்தன், சண்டை, பழிவாங்கும் கதைகள் இருக்க இப்போதோ தங்கை உறவு முறை உள்ள பெண்ணை அடைவதற்காக மனைவியின் அண்ணனே கடத்தி கொல்லப்போகிறான் ஒருவன். இந்தக்கதையும் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

பேரு நல்லா இருக்கு

பேரு நல்லா இருக்கு

தொடரின் பெயர் என்னவோ தாமரைதான். இதில் அண்ணியாக வில்லி இருக்க நாத்தனாரின் வாழ்க்கையை நாசம் பண்ண சதி செய்கிறாள். புகுந்த வீட்டு குடும்பத்தினரை தெருவில் பிச்சை எடுக்க வைப்பேன் என்றும் கணவனை தெருவில் நிப்பாட்டுவேன் என்றும் சபதம் எடுப்பதுதான் மூத்த மருமகளின் வேலையே.

கூட இருந்தே குழி பறிப்பு

கூட இருந்தே குழி பறிப்பு

மாமனார் ராகவன் வீட்டை சீரழிக்க அப்பாவுடன் சண்டை போடுவது போல நாடகமாடி, புகுந்த வீட்டிற்குள் நுழைகிறாள் மூத்த மருமகள். மாமியாரை நடித்து ஏமாற்றுவதோடு, ஓரகத்தி, கொழுந்தனார், நாத்தனாருக்கும் குழி பறிக்கும் வேலையை செய்கிறாள். இந்த மாதிரி திட்டம் போட்டு குழி பறிப்பதை பார்த்தால் ரத்தக்கொதிப்பு வராதவர்களுக்குக் கூட வந்து விடும்.

அட அந்த கதையை விடுங்க

அட அந்த கதையை விடுங்க

இது ஒரு புறம் இருக்க ராகவனின் மூத்த மகள் மீனாவிற்கோ சிக்கல் வேறுமாதிரி வருகிறது. அண்ணன் முறை கொண்ட ஒருவனே அவளை அடைய நினைத்து மீனாவின் கணவனை திட்டமிட்டு கடத்துகிறான். நான் அனுபவிக்காமல் விடமாட்டேன் என்று அந்த பெண்ணின் தம்பியிடமே கூறுவதுதான் கொடுமை.

வாழ்க்கையை சூறையாடு

வாழ்க்கையை சூறையாடு

இது ஒருபுறம் இருக்க ‘சந்திரலேகா' என்ற பெயரில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில், சந்திராவின் வாழ்க்கையை சூறையாடவேண்டும் என்று ஒருவனுக்கு திட்டம் போட்டுக்கொடுக்கிறாள் லேகா. இதற்காக சந்திராவின் வீட்டிற்கு வந்து இருந்து கொண்டு கூட இருந்தே குழி பறிக்கிறாள்.

கதறி கதறி அழணும்

கதறி கதறி அழணும்

சந்திரா அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கதறி கதறி அழணும், அதைப்பார்த்து நான் சிரிக்கணும் என்று முகத்தில் ரத்தம் கொப்பளிக்க வசனம் பேசுகிறாள் லேகா. இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் கூட இருந்தா எப்படி யாரையும் நம்பி வீட்டுக்குள்ள விட முடியும்? சீரியலை பார்க்கிறவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடாதா?

உறவுகள் மீது வெறுப்பு

உறவுகள் மீது வெறுப்பு

கூட்டுக்குடும்பங்கள் அரிதாகி வரும் இன்றைய கால கட்டத்தில் சீரியல்களின்தான் கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடிக்கிறார்கள். இதில் இப்படி திட்டம் போட்டு கவிழ்கிற வேலையை செய்து கொண்டிருந்தால் யாருக்குத்தான் கூட இருக்க மனது வரும். ஆள் ஆளுக்கு தனியாக போகவேண்டும் என்றுதானே தோன்றும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அக்கா வாழ்க்கை

அக்கா வாழ்க்கை

சொந்த அக்காவின் வாழ்க்கையை சீரழிக்க கங்கனம் கட்டிக்கொண்டு பக்கம் பக்கமாய் வசனம் பேசுகிறாள் தங்கை. இந்த சீரியலின் பெயர் கல்யாணப் பரிசாம். தோழிகள் இருவரும் ஒரே நபரை திருமணம் செய்து கொண்டு படுத்தும் பாடு இருக்கிறதே... ஐயோ... சாமி தாங்கமுடியலைடா... இதில் யாருடன் இருப்பது என்பதுதான் சூர்யா என்ற அந்த ஹீரோவிற்கு சிக்கலே.

கர்ப்பம் ஆனாலும் பரவாயில்லை

கர்ப்பம் ஆனாலும் பரவாயில்லை

மாமாவின் மகள் காயத்ரிக்கு திருமணம் ஆகி, அவள் கர்ப்பமாக இருந்தாலும் பராவாயில்லை. அவளது கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் ஒருவன். இத்தனைக்கும் அவனுக்கும் திருமணமாகிவிட்டது என்பதுதான் கொடுமை.

கடவுளே காப்பாத்துப்பா

கடவுளே காப்பாத்துப்பா

ஒரு சீரியல் மட்டும் அல்ல காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே இப்படிப்பட்ட கொடுமையைத்தான் செய்கின்றன. அதை பார்ப்பவர்களுக்குத்தான் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் எல்லாமே வந்து விடும் என்பது மட்டும் உண்மை.

English summary
Here is the another list of horrible serials of Tamil channels
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil