»   »  சத்தியம் டிவியில் ‘சூடா ஒரு டாக்’: நாடாளுமன்ற கூட்டணி பற்றி சொன்ன வைகோ

சத்தியம் டிவியில் ‘சூடா ஒரு டாக்’: நாடாளுமன்ற கூட்டணி பற்றி சொன்ன வைகோ

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சத்தியம் தொலைக்காட்சியில் அரசியல்கட்சி பிரபலங்கள் பங்கேற்கும் 'சூடா ஒரு டாக்' நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சூடா ஒரு டாக் நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.அரசியல் கட்சித் தலைவர்களுடனும், பிரபலங்களுடனும் நடைபெறும் இந்தவிறுவிறுப்பான நேர்காணல்... நடுநிலையாகவும், கட்சி சார்பற்று, மக்கள் கேள்விகளுடன் மக்களின் பிரதிநிதியாயிருந்து உரையாடும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

வைகோ சூடான விவாதம்

வைகோ சூடான விவாதம்

வரும் சனிக்கிழமை ஜூன் 1ம் தேதி வைகோ பங்கேற்று பேசுகிறார். அதற்கான ஒளிப்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளாராம்.

பிரபாகரன் பற்றி...

பிரபாகரன் பற்றி...

தன் கட்சியின் வாக்கு வங்கி, ஸ்டெர்லைட் விவகாரம், தனது போராட்டம், மக்கள் மீதான அக்கறை,விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பது பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

இரண்டு ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சி பற்றி மக்களின் கருத்து, தன்னுடைய கருத்து ஆகியவற்றையும் பதிவு செய்திருக்கிறார் வைகோ.

கொதித்த சீமான்

கொதித்த சீமான்

இந்த வாரம் ‘சூடா ஒரு டாக்' நிகழ்ச்சியில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் பங்கேற்றுப் பேசினார். யாசின் மாலிக் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான். நாங்கள் தனி நாடு கேட்டு போராடவில்லை. மத்திய அரசு தண்ணீர் கேட்டு தரவில்லை, மண்ணெண்ணை தரவில்லை, நிதி தரவில்லை தனிநாடு எப்படி தருவார்கள் என்றார் சீமான்.

சர்வதேச குற்றவாளி

சர்வதேச குற்றவாளி

சர்வதேச குற்றவாளியாக ராஜபக்சேவாக அறிவிக்க போராடுகிறோம். ஆனால் அவனுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பளம் வரவேற்பு தருகிறோம். நாங்கள் பிரிவினைவாதியில்லை என்றார்.

கச்சத்தீவு விவகாரம்

கச்சத்தீவு விவகாரம்

கச்சத்தீவை தாரை வார்த்தது எந்த விதத்தில் நியாயம். சீமான் போன்றவர்கள் பேசுவது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிக்கலாகிவிடும் என்று ஊடகங்களில் செய்திகள் வருகிறது.

அங்குள்ள மக்கள் ஈழம் கேட்கின்றனர். பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறோம். அவர்கள் ஒரே இலங்கையாக வாழ்கிறோம் என்று கூறிவிட்டால் நாங்கள் பேசவில்லை என்றார்.

பங்களதேஷ் போராட்டம்

பங்களதேஷ் போராட்டம்

தனித்தமிழ் ஈழம் கேட்டால் போராடி பிரித்து விடுங்கள். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரியவில்லை.

முஜிபூர் ரஹ்மான் கேட்டால் விடுதலைப் போராட்டம் பிரபாகரன் கேட்டால் பிரிவினைவாதம் என்பதா? தலாய்லாமாவிற்கு ஓரு நியாயம் தமிழனுக்கு ஒரு நியாயமா என்றார் சீமான். இந்த நிகழ்ச்சியை ஜென்னி துரை தொகுத்து வழங்குகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    “SOODA ORU TALK”, a hot & spicy interview show with celebrities is aired in Sathiyam TV every Saturday at 8.30 pm to 9.00 pm. This week’s “SOODA ORU TALK” comes with an exclusive interview with MDMK leader Vaiko. The interview discusses around the party alliance for the upcoming parliamentary election, LTTE leader Prabhakaran is alive, Vaiko’s vote banks, Sterlite issue, his struggle, his care towards people, 2 years regime of ADMK party,etc.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more