Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வெண்பாவிற்கு செளந்தர்யா கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்...பாரதி கண்ணம்மாவில் அடுத்து இதுதான்
சென்னை : விஜய் டிவியில் 2019 ம் ஆண்டு துவங்கி, தற்போது வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. மலையாளத்தில் கருத்த முத்து என்ற பெயரில் ஒளிபரப்பான சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா.
மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இந்த சீரியல் ஒளிபரப்பானது. தற்போது இந்த கதை தமிழில் மட்டுமல்ல மராத்தி, பெங்காலி மொழிகளிலும், இந்தியில் இரண்டு பெயர்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
ரோஷினி ஹரிபிரியன் மாற்றப்பட்டு, புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி வந்த பிறகு சிறிது நாட்கள் டல் அடித்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது மீண்டும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.இந்த சீரியல் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வந்தாலும், இதற்கு வரவேற்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.
விஜய்க்கும்
அஜித்துக்கும்
நடுவுல
இப்படி
ஒரு
போட்டி
இருந்துச்சா?:
கடைசில
யார்
ஜெயிச்சாங்கன்னு
பாருங்க

பாரதிக்கு உண்மை தெரிஞ்சுடுச்சு
ஜவ்வாக இழுத்துக் கொண்டு போன கதையில் தற்போது ஒரு வழியாக பாரதிக்கு, ஹேமா - லட்சுமி இருவருமே கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள் என்ற உண்மை தெரிந்து விட்டது. இதனால் வழக்கம் போல் பாரதி, அவரின் அம்மா-அப்பாவுடன் பேசாமல் முறைத்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவிடம் சென்று சண்டை போடுகிறார்.

நிச்சயதார்த்தத்தை நிறுத்தும் வெண்பா
இந்த சமயத்தில் இந்த வார எபிசோட்களுக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில வாரங்களாக பாரதி - கண்ணம்மா இடையேயான சீன்களால் காட்டப்படாமல் இருந்த ரோஹித் போன்றவர்களை மீண்டும் காட்டி உள்ளனர். ரோஹித் - வெண்பா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதில் செளந்தர்யா குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். கரெக்டா நிச்சயதார்த்த ஓலை வாசிக்கும் போது, கழுத்தில் உள்ள மாலையை கழற்றி விட்டு நிறுத்துங்கள் என கத்துகிறார் வெண்பா.

வெண்பாவிற்கு செளந்தர்யா கொடுக்கும் அதிர்ச்சி
யாரும் இல்லாதவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனக்கு எல்லா உறவுகளும் இருக்கும் பெரிய குடும்பத்தில் தான் வாழ விருப்பம் என்கிறார். இதைக் கேட்டு கீழே அமர்ந்திருந்த செளந்தர்யா, மேடைக்கு வந்து பேசுகிறார். செளந்தர்யா சொல்லும் விஷயத்தால் அனைவரும் ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிறார்கள். இதனால் செளந்தர்யா அப்படி என்ன ஷாக் கொடுக்க போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் இது தான் நடக்கும்
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், மேடைக்கு வரும் செளந்தர்யா, ரோஹித்தை தனது மகனாக தத்தெடுப்பதாக தெரிவிப்பார். தற்போது தன்னுடைய மகனான ரோஹித்தை திருமணம் செய்து கொள் என வெண்பாவிடம் கூறுவார். வேறு வழியில்லாமல் வெண்பா அமைதியாவார். வெண்பா - ரோஹித் நிச்சயதார்த்தம் முடியும். இது தான் இந்த வாரத்தில் நடக்க போகிறது என சொல்லப்படுகிறது.
-
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அதே 450 கோடி பட்ஜெட்... ஜெயம் ரவிக்கு பதிலாக சுந்தர் சி டிக் செய்த ஹீரோ... கரையேறுமா சங்கமித்ரா?