வெண்பாவை துப்பாக்கியால் சுடும் செளந்தர்யா.... இது என்ன புது ட்விஸ்டா இருக்கு ?

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல். நடுவுல் சில நாட்கள் போரடித்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது இந்த சீரியல்.

அடுத்து என்ன நடக்கும், இப்படி ஆகுமா, அப்படி ஆகுமா என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக சென்று கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. பாரதியும், கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என பலர் ஆவளோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையை சொல்லும் செளந்தர்யா

உண்மையை சொல்லும் செளந்தர்யா

இரண்டாவது குழந்தை தன்னிடம் தான் உள்ளது என வெண்பா மிரட்டுவதை நம்பி, பாரதியை விவாகரத்து செய்ய தயாராகிறாள் கண்ணம்மா. விவாகரத்து ஃபார்மில் கையெழுத்து போட்டு, வெண்பாவிடம் கொடுக்க போகும் சமயத்தில் கண்ணம்மாவின் வீட்டிற்கு வரும் செளந்தர்யா, எதற்காக இப்போது விவாகரத்து என கேட்கிறார். அவரிடம் காரணத்தை கூற மறுக்கும் கண்ணம்மா, இரண்டாவது குழந்தை பற்றி கூறி அழுகிறாள்.

ஷாக்காகும் குடும்பத்தினர்

ஷாக்காகும் குடும்பத்தினர்

இதனை பார்த்த செளந்தர்யா, ஹேமா தான் உனக்கு பிறந்த இன்னொரு குழந்தை என்ற உண்மையை கண்ணம்மாவிடம் சொல்கிறார். இதைக் கேட்டு கண்ணம்மா கதறி அழுவதாக கடந்த வாரம் எபிசோட் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியிட்டனர். அதில், உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மா, ஹேமாவை பார்க்க ஓடி வருகிறாள். ஹேமாவை கொஞ்சும் கண்ணம்மா, நான் உனக்கு என்ன வேண்டும் தெரியும் என கேட்கிறாள். இதை பார்த்து செளதர்யா குடும்பத்தில் உள்ள பாரதி உள்ளிட்ட அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

வழக்கம் போல் சமாளிப்பீர்கள்

வழக்கம் போல் சமாளிப்பீர்கள்

இந்த ப்ரோமோவால், ஹேமா யார் என்ற உண்மை பாரதிக்கும் தெரிய போகிறதா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். சிலர், வழக்கம் போல் ஏதாவது காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள். பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா, ஹேமா மீது பாசத்தை பொழிவார். இதை வைத்து சில நாட்கள் ஓட்டுவீர்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.

வெண்பாவை சுடும் செளந்தர்யா

வெண்பாவை சுடும் செளந்தர்யா

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் லேட்டஸ்ட் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வெண்பாவின் வீட்டிற்கு வரும் செளந்தர்யா, வெண்பாவை துப்பாக்கியால் சுடுகிறார். இதில் சோஃபாவில் சரிந்து விழுகிறாள் வெண்பா. இது வரும் வாரத்திற்கான மேக்கிங் வீடியோ என்று வேறு சொல்லப்படுகிறது. அதோடு வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத், 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் என்னை சிறப்பாக பயன்படுத்தி ஸ்டன்ட் சீன் எடுத்துள்ளனர் என குறிப்பிடுவதாக கேப்ஷன் இடம்பெற்றுள்ளது.

யாரோட கனவு இது

யாரோட கனவு இது

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், இது யாரோட கனவுப்பா. ட்விட்ஸ் போல காட்டி கடைசியில் கனவு என்பீர்கள். எங்களுக்கு தெரியாதா என கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர் இது வெண்பாவின் கனவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். வெண்பா கேரக்டருக்கு சில காலம் பிரேக் கொடுப்பதற்காக இந்த சீன் வைக்கப்பட்டிருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.

வெண்பாவுக்கு பிரேக்கா

வெண்பாவுக்கு பிரேக்கா

வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். பிரசவத்திற்காக அவர் பிரேக் எடுக்க உள்ளதால், இப்படி ஒரு சீனை வைத்து அவரின் கேரக்டருக்கு சில மாதங்கள் பிரேக் விட்டு, மீண்டும் வெண்பா கேரக்டர் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X