»   »  மயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி

மயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கனவுக்கன்னியாக வலம் வந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்கே டிவி சீரியல்களில் நடித்துள்ளார். பிராமணப் பெண்ணாக அவர் நடித்த மாலினி ஐயர் 2004 ஆண்டு சகாரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.

தமிழ்சினிமா மட்டுமல்லாது பாலிவுட் உலகிலும் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடித்த சீரியல் மாலினி ஐயர். காமெடி சீரியல். 2004ஆம் ஆண்டு சகரா ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ் டிவி ரசிகர்கள்

தமிழ் டிவி ரசிகர்கள்

பாலிவுட் சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வந்தள்ளார் மயில் நடிகை ஸ்ரீதேவி.

மாலினி ஐயர்

மாலினி ஐயர்

பெரிய திரையில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி, முதல் முறையாக சின்னத்திரையில் "மாலினி ஐயர்" என்ற மாறுபட்ட குடும்ப தொடரில் நடித்துள்ளார். இத்தொடர் வானவில் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வௌளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது.

பிராமணப் பெண்

பிராமணப் பெண்

தமிழ் பிராமணப்பெண்ணான மாலினி ஐயர் ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள். தன் புகுந்த வீட்டுக்கு வந்ததும் கலாச்சாரமும், மொழியும் அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க, அதில் இருந்து எப்படி வெளிவந்தாள் என்பதே கதை.

தமிழ் பிஏ

தமிழ் பிஏ

மாமியார் வீட்டில் உள்ள அனைவரது மனதிலும் இடம்பிடித்து தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காத்து வாழ்க்கை நடத்தும் மாலினி, கூடவே இந்தியும் கற்றுக்கொள்கிறார். அவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள்தான் சீரியலின் ஹைலைட். வானவில் டிவியில் தினசரி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தென்னிந்திய பிராமணப் பெண் வட இந்திய மாப்பிள்ளையுடன் குடும்பம் நடத்தும் கலாட்டதான் கதை.

English summary
Malini Iyer is an Indian comedy television series in Telugu, Starring Indian actress, Sridevi in the main lead

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil