For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ மகா பெரியவர்!

  By Mayura Akilan
  |

  ஸ்ரீ சங்கரா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவரின் வாழ்க்கை கதைகள் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கிறது.

  காஞ்சி காமகோடி மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். பொதுவாக பலருக்கும் இவர் 'பெரியவா'. குழந்தைகளுக்கு 'உம்மாச்சி தாத்தா'.

  தன் சீடர்கள் மற்றும் பக்தர்களால் சிவ சொரூபமாகவே வணங்க ப்பட்டவர் மகா ஸ்வாமிகள். 'சாட்சாத் சிவபெருமானின் அம்சம் இவர்' என்று போற்றப்பட்டவர். இந்தக் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்த பெரியவாளை தரிசித்தவர்கள் பாக்கிய சாலிகளே!

  கருணை தெய்வம்

  கருணை தெய்வம்

  கருணை தெய்வம் காஞ்சிமாமுனிவர் ஸ்ரீ மகா பெரியவரின் நூறாண்டு கால தூய தவவாழ்க்கை அற்புதமான ஒன்று. அவரை தரிசிக்க தினம் வந்த அன்பர்களுக்கு அவர் செய்த அருள் அளவிலாதது.

  மூதாட்டியின் தவிப்பு

  மூதாட்டியின் தவிப்பு

  மகா பெரியவாளை தரிசித்து அவரின் அருள் பெறுவதற்காக ஏராளமானோர் பெருங்கூட்டமாக திரள்வர். கூட்டத்தில் எங்கேனும் ஒரு மூலையில்... வரிசை யில் நிற்கக்கூட தெம்பு இல்லாமல், வயதான ஒரு மூதாட்டி சிறிய கல்கண்டு பொட்டலத்தை வைத்துக் கொண்டு, ‘இதைப் பெரியவா கையில் எப்படியாவது சேர்க்க வேண்டுமே?' என்று தவித்து மருகுவார். மூதாட்டியின் தவிப்பை பெரியவா உணர்ந்து விடுவார். தன் உதவியாளர் ஒருவரிடம் அடையாளம் சொல்லி, அந்த மூதாட்டி யைக் கைத் தாங்கலாகத் தன்னிடம் அழைத்து வருமாறு உத்தரவிட்டு அந்த கல்கண்டினைப் பெற்றுக் கொள்வார்.

  தூய பக்தி

  தூய பக்தி

  இறைவனின் அருளைப் பெற கள்ளமில்லா மனமும் தூய பக்தியும் போதும். மகா பெரியவாளிடமும் இப்படி பக்தி செலுத்தி அவரின் திருவருளைப் பெற்ற வர்கள் ஏராளம்!

  பணத்தை தொடாதவர்

  பணத்தை தொடாதவர்

  மகா பெரியவா தன் வாழ்நாளில் பணத்தைக் கையால் தொட்டதில் லை. "அங்கே வெச்சுட்டுப் போ" என்று தரையைக் காண்பிப்பார். பணத்துடன் வந்தவரை, திருப்பியும் அனுப்பியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் சிலரது பணத்தை, அங்கு வந்துள்ள வேறு பக்தரின் உதவிக்காகத் தரச்சொல்லிவிடுவார். ஒருவர் கொடு க்கும் பணத்தை மகான் ஏற்கிறார் என்றால், அதற்கு சம்பந்தப்பட்டவர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  பொக்கிஷம்

  பொக்கிஷம்

  எளிமைக்கு உருவமாய் ஆதி சங்கரரின் உயர்ந்த பீடத்தில் பீடாதி பதியாக இருந்து துறவு வாழ்க்கைக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் அவர். மனிதர்கள் இன்பமாய் வாழ அவர் செய்த உபதேசங்கள் மனித குலத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷம் போன்றது.

  அவரை ஜாதி,மத,மொழி இன வேறுபாடு இன்றி அனைவரும் வந்து தரிசித்து அருள்பெற்றது அவரின் அன்பிற்கு எடுத்துக்காட்டு. எனவேதான் மகா பெரியவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களை ஸ்ரீ சங்கரா டிவி திங்கள் முதல் வெள்ளிவரை தினசரி காலை 6 மணிக்கு ஒளிபரப்புகிறது.

  English summary
  Sri sankara tv telecasting sri mahaperiyava,s life history and the thrilling experiences of his devotees presented by sri ganesa sarma Monday to friday daily morning 6 .00 am to 6.30 am the way in which the sri ganesa sarma narrates the anecdotes really gives the devine experience to the viewers all over the world.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more