»   »  புதுயுகம் டிவியில் புது சீரியல் ஸ்ரீசனீஸ்வர மகிமை

புதுயுகம் டிவியில் புது சீரியல் ஸ்ரீசனீஸ்வர மகிமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

‘அள்ளிக்கொடுக்கும் வள்ளல்', ‘நியாயம் தவறாத நீதிமான்', 'நவக்கிரக நாயகன்' என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஸ்ரீசனீஸ்வர பகவான்.

சூரிய தேவன்- சாயாதேவியின் மகனாக இவர் அவதரித்த வரலாறும் பக்தர்களுக்கு அருள்பாலித்த இதிகாச கதைகளும் நிரம்பிய ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சூரியனின் மைந்தன்

சூரியனின் மைந்தன்

சூரியதேவனுடன் சந்தியாதேவிக்கு திருமணம் முடிகிறது. சூரியன் மீது அளவுகடந்த அன்பு இருந்தாலும், வெம்மையினால் அவரை நெருங்கமுடியாமல் தவிக்கிறார் சந்தியாதேவி. அதனால் கணவரை நெருங்கும் சக்தியை வரமாகப்பெறுவதற்கு கடும் தவம் இயற்ற முடிவு செய்கிறார்.

சாயாதேவி

சாயாதேவி

வரம் பெற்று திரும்பும்வரையிலும் சூரியதேவனின் உதவிக்காக, தன்னுடைய நிழலில் இருந்து சாயாதேவியை உருவாக்குகிறார். சாயாதேவியை சந்தியாதேவி என்றே நினைத்து சூரியபகவான் அன்பு காட்டுகிறார். சூரினுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறக்கிறார் சனி பகவான்.

குருவான சிவன்

குருவான சிவன்

கோபமும் துடிப்பும் நிறைந்த சனிக்கு, சிவபெருமான் குருவாக இருந்து அத்தனை கலைகளையும் கற்றுக்கொடுக்கிறார். மேலும் தன்னுடைய அம்சமாக இருந்து, உயிர்களுக்கு நீதி வழங்கும் மாபெரும் பொறுப்பையும் சனியிடம் ஒப்படைக்கிறார்.

சிவ அம்சம்

சிவ அம்சம்

சிவனின் அம்சமாக நின்று நியாயம் வழங்குவதாலே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார். நியாயஸ்தராக தீர்ப்புவழங்கும் சனி பகவானைக் கண்டு நல்லவர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.

சனீஸ்வர மகிமை

சனீஸ்வர மகிமை

ஆம், தோஷ காலங்களிலும் சனி பகவானை மனப்பூர்வமாக வணங்கி நின்றால், அனைத்து துன்பங்களில் இருந்தும் விமோசனம் பெறலாம். தன்னை உள்ளன்போடும் நம்பிக்கையோடும் வணங்கும் பக்தர்களுக்கு சனீஸ்வர பகவான் நிச்சயம் அருள்புரிவார் என்பதை விளக்குகிறது, ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடர்.

புதுயுகம் டிவியில்

புதுயுகம் டிவியில்

ராமாயணம், மகாபாரம் போன்ற இதிகாசத் தொடர்களைத் தயாரித்து வழங்கிய சாகர் ஆர்ட்ஸ் நிறுவனம், ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடரை பிரமாண்டமாக தயாரித்து வழங்குகிறது. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு, ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
Lord Shani and his greatness on Pudhuyugam TV Sri Saneeswara Magimai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil