»   »  வம்சம் - வழைப்பழமும் மூளை மறதி நோயும்.... நல்லா விடுறாங்கப்பா ரீலு

வம்சம் - வழைப்பழமும் மூளை மறதி நோயும்.... நல்லா விடுறாங்கப்பா ரீலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம் எபிசோடு கடந்த வம்சம் சீரீயலை, விடாது பார்க்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எல்லாம் நந்தகுமாரின் காமெடி வில்லத்தனத்துக்காகத்தான். ஜோதிகாவை திருமணம் செய்வதற்காக மனைவி ராதாவை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கிணற்றில் தள்ளி கொலை செய்கிறான். ஆனால் வழக்கம் போல ராதா பிழைத்துக்கொள்கிறாள்.

நந்தகுமாரை பேயாக வந்து மிரட்டுகிறாள் ராதா. இதுவும் பூமிகா ஒருமுறை பேயாக வந்து மதனை மிரட்டிய கதைதான். அட போங்கம்மா... அவன் அவன் நூறுக்கும் ஐம்பதுக்கும் நாயாக அழைகிறான். இங்கே திருமணம் ஆன பெண்ணை அவனது கணவனின் நினைவுச் செல்களை அழித்து விட்டு இரண்டாம் திருமணம் செய்ய திட்டம் போடுகிறான் நந்த குமார்.

ஜோதிகாவின் கணவன் சர்வேஷ் மூளையில் உள்ள நினைவுகளை அழிக்கும் அமெரிக்க போலி டாக்டர். கடைசியில் ஒரு விஷயம் சொல்வதுதான் காமெடி, இங்க பாருங்க... இவனுக்கு வாழைப்பழம் மட்டும் கொடுக்காதீங்க. அப்படி கொடுத்தா, அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்துடும்னு சொல்ல, வாழைப்பழத்தை சர்வேஷ் கண்ணீல் படாமல் மறைக்க பாடத பாடு படுகிறான் நந்த குமார்.

தப்பிப்பதில் கில்லாடி

தப்பிப்பதில் கில்லாடி

போடி டாக்டரை மடக்கி, அவனை வைத்து நந்தகுமாரை பிடிக்க அவன் மூலம் திட்டம் போடுகிறாள் சக்தி, அந்த திட்டம் வெற்றிகரமாக நடந்தாலும், கடைசியில் வழக்கம் போல பூமிகாவையும், சக்தியையும், ஏமாற்றி தப்பித்து சென்றுவிடுகிறான்.

சென்டிமெண்ட் பெயர்கள்

சென்டிமெண்ட் பெயர்கள்

வம்சம் சீரியல் கிரியேட்டிவ் ஹெட் ரம்யா கிருஷ்ணனுக்கு 'க' வரிசை பெயர்கள் மீது அப்படி என்னதான் மோகமோ தெரியலை, பூமிகா, ஜோதிகா, தேவிகா, கார்த்திகா என வரிசை கட்டுகின்றன. இன்னும் எத்தனை 'க' வரிசை கட்டுமோ தெரியலையே.

எல்லாம் டபுள் ஆக்ட்தான்

எல்லாம் டபுள் ஆக்ட்தான்

ஒரு சீரியலில் ஒருவர் டபுள் ஆக்ட் செய்தால் பரவாயிலை ஆனால் சீரியலில் ஹீரோயின் தொடங்கி வில்லன் வரை டபுள் ஆக்ட் செய்வது அநேகமாக இந்த சீரியலாகத்தான் இருக்கும். பூமிகாவின் கணவனாக நடித்த மதன் இப்போது மதனுக்கும் டபுள் ஆக்ட் கொடுத்து விட்டார்கள்.

என்னா தெலுங்கு?

என்னா தெலுங்கு?

வம்சம் சீரியலில் சுந்தரத்தெலுங்கு படும் பாடு காது கொடுத்து கேட்க முடியலையே. மூளையில் உள்ள நினைவுச் செல்களை அழித்த பின்னர் ஆந்திராவில் இருந்து பெண் பார்த்து திருமணம் செய்கின்றனர். அந்த பெண்ணின் அண்ணன்தான் பூமிகாவின் கணவன் சாயலில் இருக்கும் நபர். அவரை பார்த்து ஒருவேளை மதன் மாறுவேஷத்தில் இருக்கிறானோ என்று பயப்படுகிறான் நந்தகுமார்.

ராதிகாவின் தோழி ஜோதிகா

ராதிகாவின் தோழி ஜோதிகா

சர்வேஷ் திருமணம் செய்து கொள்ளப்போகும் ராதிகா, ஜோதிகாவின் தோழியாம். எப்படி தோழி என்றெல்லாம் கேட்கக் கூடாது. நிச்சயத்திற்கு கூப்பிட சென்னை வரும் போது இருவரும் இணைந்து இருக்கும் போட்டோவை குழந்தை மட்டும் பார்க்கிறது.

நினைவு வர வைத்த வாழைப்பழம்

நினைவு வர வைத்த வாழைப்பழம்

திருமணம் நிச்சயம் நடக்கும் நாளில் வாழைப்பழம் சாப்பிட்ட சர்வேசுக்கு பழைய நினைவுகள் வரவே அவன் தப்பி ஓடி வந்து அர்ச்சனாவிற்கு போன் செய்கிறான். ஏன் மனைவி பூமிகாவிற்கு போன் செய்தால் உடனே பார்த்து கூப்பிட்டு போய்விடுவாளே. இன்னும் எத்தனை நாளைக்கு எப்படி எல்லாம் காதில் பூ சுற்றப்போகிறார்களோ தெரியலையே?. சீரியலை எப்ப நிறுத்த போறீங்க என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

English summary
Viewers comments Vamsam Serial Whatever I see in this serial is stupid concepts that even a child will make complaints about this serial.You are just prolonging the serial for your sake...you never care about audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil