»   »  சன் சிங்கர்: பாட்டுப்பாடிய குழந்தைக்கு மோதிரம் போட்ட கங்கை அமரன்

சன் சிங்கர்: பாட்டுப்பாடிய குழந்தைக்கு மோதிரம் போட்ட கங்கை அமரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் இசை நிகழ்ச்சியில் அழகாக பாட்டுப்பாடி அசத்திய குட்டி பாடகிக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார் நடுவர் கங்கை அமரன்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சன் சிங்கர் இசை நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. மழலைக் குழந்தைகள் கொஞ்சும் தமிழில் பேசி பார்வையாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கின்றனர்.

அனுராதா ஸ்ரீராம், கிரிஸ், கங்கை அமரன் ஆகியோர் குழந்தைகள் இசை நிகழ்ச்சியான சன் சிங்கரின் நடுவராக உள்ளார். குழந்தைகளுக்கு பாடுவதற்கும் பயிற்சி தருகிறார் கங்கை அமரன்.

இதில் ஒரு குழந்தை மிகவும் கடினமான பாடலான காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாடலை அழகாக எளிமையாக பாடி அசத்தியது. இதை கண்ட கங்கை அமரன் அந்த குழந்தையை பாராட்டினார். நீ என்ன வேணா கேளு நான் தறேன் என்று கூறினார் கங்கை அமரன்.

உடனே அந்தக் குழந்தை எனக்கு வைர மோதிரம் வேண்டும் என்று கூறவே, சரி நான் தறேன் என்று கூறி தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி அந்த குழந்தைக்கு கொடுத்தார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக பாட்டுப்பாடிய குழந்தைக்கு மோதிரத்தை பரிசளித்துள்ளார் நடுவர் கங்கை அமரன் என்று பாராட்டினார் நிகழ்ச்சி தொகுப்பாளினி.

English summary
Gangai Amaran gift a gold ring for baby Singer on SunTV Sun Singer Programe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil