எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் முல்லை யார் தெரியுமா? அட அவருக்கு இவ்வளவு திறமையா?
சென்னை: சன் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அனைவருக்கும் பிடித்தமான சீரியலாக உள்ளது. இந்த சீரியலில் நந்தினி பின்னால் சுற்றி வரும் முல்லை கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் யார் என்பது பற்றி இந்த செய்தியில் நாம் பார்க்கலாம்.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்ற இந்த சீரியலின் முதல் பாகம முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் விறுவிறுப்பாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் ஜெயிலுக்கு சென்ற குணசேகரன் ரெண்டாவது பக்கத்துல, ஜாமீன் பெற்று மீண்டும் வீட்டுக்கு வந்து தன்னோட ஆதிக்கத்தை செலுத்தி மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தார். இதற்கு இடைஞ்சலாக இருந்த ஜனனியை தீட்டு கட்ட பலவிதமான திட்டங்கள் போட்டு அதில் தோல்வி அடைந்தார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தர்ஷனின் திருமண விஷயத்தால் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே பார்கவியை தர்ஷன் காதலித்து ஏமாற்றிவிட்டு, அன்புக்கரசியை திருமணம் செய்து கொள்ள இருந்த நேரத்தில், தர்ஷனின் மனம் மாறி மீண்டும் பார்கவியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனால், ஏற்பட்ட பிரச்சனையால் தர்ஷன் வீட்டை விட்டு ஓடிவிட, பார்கவிக்கு இதனால் பிரச்சனை ஏற்பட்டு, இதில் நடந்த சண்டையில் பார்கவியின் அப்பா உயிரிழந்தார். அப்பாவை இழந்து தவிக்கும் பார்கவிக்கு, தர்ஷனை திருமணம் செய்து வைக்க, ஈஸ்வரி நினைத்தார். ஆனால், குணசேகரன் அறிவுக்கரசியோட தங்கை அன்புக்கரசியை தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். இதில், குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் ஏற்பட்ட சண்டையில குணசேகரன், ஈஸ்வரியை தாக்கியதில், ஈஸ்வரி மருத்துவமனையில் கோமா நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள்.
யார் இந்த முல்லை: அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கரிகாலன் கதாபாத்திரத்திற்கு ஈக்குவலா முல்லையோட கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் உண்மையான பெயர் லட்சுமி காந்த். இவர் சினிமா துறையில் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு மேலாக இருக்கிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர், படத்தில் வரும் பிரபலமான காட்சியை அப்படியே ரீகிரியேட் செய்து அதை தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் மாஸ் சீனை இவர் ரீகிரியேட் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் லட்சுமி காந்தன் குறும்படத்தையும் இயக்கி இருக்கிறார். கன்டென்ட் கிரியேட்டராக இருக்கும் லட்சுமி காந்திற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் முதல் சீரியல். இதுதான் முதல் சீரியலா என பலரும் யோசிக்கும் அளவிற்கு தன்னுடைய முல்லை கதாபாத்திரத்தில் அட்டகாசமா நடித்து வருகிறார் லட்சுமி காந்த்.


Click it and Unblock the Notifications











