குணசேகரனின் சூழ்ச்சி.. கைதான ஜனனி.. அடுத்தடுத்து நடந்த திருப்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: மருத்துவமனைக்கு வரும் போலீஸ் அதிகாரி, மருத்துவரிடம் ஈஸ்வரியின் உடல் நிலை குறித்து விசாரிக்கிறார். ஈஸ்வரியை தலையில் யாரோ பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் தற்போது சுயநினைவு இழந்து இருக்கிறார். ஆனால், நேற்று யாரோ அவரை சந்தித்து பேசி இருப்பதால் அவருடைய பிபி நார்மலாக இல்லை என்று சொல்கிறார். இதை அடுத்து யார் அவரிடம் பேசியது என போலீசார் விசாரணை நடத்த ஜனனி, தர்ஷினி இருவருமே நாங்கள் அவரை சந்தித்து பேசவில்லை என சொல்கின்றனர்.

பின் போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவியை ஆய்வு செய்கிறார். அப்போது சிசிடிவியில் பார்கவி வருவதும் ஜீவானந்தம் அவளை அவசரமாக கையை பிடித்துக் கொண்டு வெளியே அழைத்துச் சென்றதும் தெரிய வருகிறது. இதைப் பார்த்த அதிகாரி, யார் இவர்கள் என்று கேட்க, ஜனனியும் தர்ஷினியும் அவள் பார்கவி என் அண்ணனை காதலித்த பெண், ஆனால், அவள் கன்னடாவிற்கு சென்று விட்டதாக ஜீவானந்தம் சொன்னார். எப்படி இங்கு வந்தால் என்று தெரியவில்லை என்கின்றனர். அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி வீட்டில் இருப்பவர்கள் தான் ஈஸ்வரியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியதாக நீங்கள் புகார் அளித்திருக்கும் நிலையில், ஜீவானந்தத்தின் நடவடிக்கையை பார்த்தால் அவர் மீது சந்தேகம் வருகிறதே என்று கேட்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது தர்ஷினி, ஜீவா அப்பாவை பற்றி தவறாக பேசாதீர்கள், அம்மா நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரே மனிதர் அவர் தான். என் அம்மாவை இந்த நிலைமைக்கு ஆக்கியது என்னுடைய அப்பா குணசேகரன் தான் அவரை கைது செய்து விசாரணை நடத்துங்கள் என்கிறார். உடனே போலீஸ் அதிகாரி அதற்கு ஆதாரம் இருக்கிறதா... என்று கேட்க, உடனே தர்ஷினி அதை நீங்கள் தான் சார் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். இதையடுத்து, மீண்டும் போலீஸ் அதிகாரி குணசேகரன் வீட்டிற்கு விசாரணை நடத்துவதற்காக ஜனனியை அழைத்துக்கொண்டு வருகிறார்.

ஜனனி தான் காரணம்: இன்றைய எபிசோடில் நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வரும் சக்தியிடம், குணசேகரன் உன்னுடைய மனைவி ஜனனி குடும்பத்தையே நாசம் செய்ய பார்க்கிறாள் என்று சொல்ல, வீட்டில் என்ன நடந்தது எனக்கு எதுவுமே தெரியாது என்று சத்தி சொல்ல, அப்போது நந்தினி வீட்டில் நடந்த அனைத்து விஷயத்தையும் சக்தியிடம் சொல்கிறாள். இப்படி இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க வீட்டிற்கு போலீஸ் அதிகாரி வந்து, மருத்துவமனையில் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்லி விசாரணை நடத்துகிறார். உடனே, குணசேகரன், என்னுடைய மனைவி ஈஸ்வரியை இந்த நிலைமைக்கு ஆக்கியது ஜனனி தான் என்று சொல்ல. அந்த நேரம் பார்த்து ஜீவானந்தத்திடம் இருந்து போன் வருகிறது. அந்த ஃபோனை ஜனனி எடுப்பதற்குள் கதிர் அவளுடைய கையில் இருந்து ஃபோனை புடுங்கி ஸ்பீக்கரில் போடுகிறான்.

அதில், பேசிய ஜீவானந்தம் நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியே வந்து விட்டேன். என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்கிறார். மேலும், நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள் ஜனனி என சொல்லிவிட்டு ஃபோனை வைக்க போலீஸ் அதிகாரிக்கு ஜனனி மீது சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், பேசிய குணசேகரன், ஜீவானந்தம் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு, எங்க வீட்டு பொம்பளைகளுக்கு நல்லது செய்வது போல நாடகமாடுகிறான் என்கிறார். இதைக்கேட்ட ஜனனி, அவருடைய பொண்டாட்டியை கொன்றது யாரு, தைரியம் இருந்தா அதை சொல்லுங்கள் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X