ஜீவானந்தத்திற்கும் ஈஸ்வரிக்கும் கள்ள உறவு.. கொடூர முகத்தை காட்டிய குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: வீட்டிற்கு வரும் போலீஸ் அதிகாரி, மருத்துவமனையில் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்லி விசாரணை நடத்துகிறார். உடனே, குணசேகரன், என்னுடைய மனைவி ஈஸ்வரியை இந்த நிலைமைக்கு ஆக்கியது ஜீவானந்தம் தான். திருமணத்திற்கு முன்பே என்னுடைய மனைவிக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே உறவு இருந்துள்ளது. இதனால், ஈஸ்வரி என்னுடன் மகிழ்ச்சியாக வாழவே இல்லை. எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். இதனால் 20 வருடமாக நானும் என் மனைவியும் தனித்தனியாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

என் மகளை நானே கடத்தி விட்டதாக ஒரு பொய்யான புகாரை போட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பினார்கள். அப்போது, ஈஸ்வரி ஜீவானந்தத்துடன் கோடைக்கானலுக்கு சென்று வாழ தொடங்கினாள். என் அம்மா ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என கூறியதால், ஜீவானந்தயத்தை விட்டுவிட்டு ஈஸ்வரி இங்கே வாழ வந்தாள், அன்றிலிருந்து ஜீவானந்தம் எப்படியாவது ஈஸ்வரியின் கதையை முடிக்க வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான நேரம் சரியாக அமைந்துவிட்டதால், இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டான். ஜீவானந்தம் அப்படி செய்யக்கூடியவர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது, எங்களுக்கே தெரியாமல், எங்கள் வீட்டிற்கு வந்து அப்பத்தாவிடம் இருந்த சொத்தை எழுதி வாங்கியவர் தான் ஜீவானந்தம் என ஆதாரத்தை காட்ட ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது நந்தினி, ஏன் அக்கா பற்றி இப்படி வாய்க்கு வந்ததை பேசுகிறீர்கள் என்று சொல்ல, கதிர் அவளை அடிக்க பாய்கிறான். அப்போது, ஜனனி சார், இவர் சொல்வதில் ஒன்று கூட உண்மை இல்லை எல்லாமே பொய் என்று சொல்கிறாள். உடனே குணசேகரன், ஏழை குடும்பத்தில் இருந்த பெண் எடுத்தால், இந்த குடும்பம் நன்றாக இருக்கும் என்பதற்காக ஜனனியை என்னுடைய தம்பி சக்திக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், ஜனனிக்கு எங்களுடைய சொத்து மீது தான் ஆசை, சொத்துக்கு ஆசைப்பட்டு தான் என்னுடைய தம்பியை திருமணம் செய்து கொண்டு இந்த குடும்பத்தையே படாதபாடு படுத்துகிறாள். இப்போது சொத்து கிடைக்கவில்லை என்பதற்காக என்னுடைய மனைவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கி அதன் பழியை என் மீது போட பார்க்கிறாள். ஜீவானந்தத்திற்கு வீட்டிலிருந்து உதவி செய்வது ஜனனி தான், என அடுக்கடுக்கான புகார்களை குணசேகரன் கூறுகிறார்.

கைதான ஜனனி: அந்த நேரம் பார்த்து ஜீவானந்தத்திடம் இருந்து போன் வருகிறது. அந்த ஃபோனை ஜனனி எடுப்பதற்குள் கதிர் அவளுடைய கையில் இருந்து ஃபோனை புடுங்கி ஸ்பீக்கரில் போடுகிறான். அதில், பேசிய ஜீவானந்தம் நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியே வந்து விட்டேன். என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்கிறார். மேலும், நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள் என சொல்லிவிட்டு ஃபோனை வைக்க போலீஸ் அதிகாரிக்கு ஜனனி மீது சந்தேகம் வர, ஜனனியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

ஈஸ்வரி மீது முன்பகை: ஜனனியை கோர்ட்டில் ஆஜர் படுத்த குணசேகரன் தரப்பு வழக்கறிஞர் ஈஸ்வரி இந்த நிலைமைக்கு ஆளாகியதே ஜனனியும் ஜீவானந்தமும் தான். ஜீவானந்தம் வெளியில் இருந்து அனைத்தையும் சொல்ல ஜனனி வீட்டிலிருந்து அதை செயல்படுத்தி இருக்கிறாள். அது மட்டுமல்லாமல் பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் சென்றதாக ஜனனி சொல்கிறாள். ஏற்கனவே இந்த விஷயத்தில் பிரச்சனை இருக்கும் போது எப்படி திருமணம் செய்து வைக்க முடியும். அது மட்டுமல்லாமல், தமிழ்சோறு என்ற நிறுவனத்தை இவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். அதில் மூளையாக செயல்பட்டவர் ஈஸ்வரி, அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இப்படி ஒரு செயலை ஜனனியும் ஜீவானந்தமும் சேர்ந்து செய்துவிட்டார்கள் என குணசேகரன் தரப்பு வழக்கறிஞர் புகார்களை முன்வைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X