இனிமேல் தான் இறுதி யுத்தம்.. குணசேகரனிடம் சவால் விட்ட ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜனனியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வழக்கறிஞர் ஈஸ்வரி இந்த நிலைமைக்கு ஆளாகியதே ஜனனியும் ஜீவானந்தமும் தான். ஜீவானந்தம் வெளியில் இருந்து அனைத்தையும் சொல்ல ஜனனி வீட்டிலிருந்து அதை செயல்படுத்தி இருக்கிறாள். அது மட்டுமல்லாமல் பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் சென்றதாக ஜனனி சொல்கிறாள். ஏற்கனவே இந்த விஷயத்தில் பிரச்சனை இருக்கும் போது எப்படி திருமணம் செய்து வைக்க முடியும். அது மட்டுமல்லாமல், தமிழ்சோறு என்ற நிறுவனத்தை இவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். அதில் மூளையாக செயல்பட்டவர் ஈஸ்வரி, அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இப்படி ஒரு செயலை ஜனனியும் ஜீவானந்தமும் சேர்ந்து செய்துவிட்டார்கள் என குணசேகரன் தரப்பு வழக்கறிஞர் புகார் கூறுகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

அதைத்தொடர்ந்து தர்ஷனை விசாரணைக்கு அழைக்கும் வழக்கறிஞர், உங்களுடைய அம்மா ஈஸ்வரி, குணசேகரனிடம் சண்டை போட்டுக்கொண்டு கொடைக்கானலில் ஜீவானந்தத்துடன் வாழ்ந்து வந்தாரா என கேட்கிறார். இந்த கேள்விகள் திணறி போன தர்ஷன் ஆமாம், என்று பதில் சொல்கிறார். பின் வழக்கறிஞர் மீண்டும், குணசேகரன் தன்னுடன் வாழ வருமாறு ஈஸ்வரி அழைத்ததால். ஈஸ்வரி குணசேகருடன் வாழ்வதற்காக வந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதே நேரம் ஜனனிக்கும் ஈஸ்வரியால் மனக்கசப்பு ஏற்பட்டதால், இருவரும் சேர்ந்து ஈஸ்வரியை பலமாக தாக்கி விட்டார்கள் என கூறுகிறார். இதை தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில், ஜீவானந்தம் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவருக்கு இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது. இதனால் அவரையும் பார்கவியையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அதே நேரத்தில், ஜனனியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்பதால், ஜனனியை ஜாமீனில் விடுதலை செய்கிறேன் என தீர்ப்பு அளிக்கிறார்.

அடித்து துவைத்த சக்தி: இதைத்தொடர்ந்து ஆக்ரோஷத்துடன் வீட்டுக்கு வரும் ஜனனி, குணசேகரனுடன் சமமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இப்போதுதான் உங்களுக்கும் எனக்கும் இறுதி யுத்தம் ஆரம்பமாகிறது. இத்தனை நாள் அன்பு, பாசம், குடும்பம் என்று இருந்து விட்டோம். ஆனால், இனிமேல் உங்களுக்கு அன்பும் கிடையாது பாசமும் கிடையாது. எங்களுடைய கைவரிசையை இனிமேல் தான் நீங்க பார்க்க போகிறீர்கள். ஈஸ்வரி அக்காவிற்கு நடந்த அநியாயத்திற்கு நியாயம் வாங்கி கொடுக்காமல் நாங்கள் யாரும் ஓய மாட்டேன் என சவால் விட்டுக் கொண்டு இருக்கிறாள். அப்போது கதிர், யாரிடம் சவால் விடுற, இன்னையோட உன் கதையை முடிக்கிறேன் என கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க வருகிறான். இதை பார்த்துக் கொண்டிருந்த சக்தி தன்னுடைய மனைவி ஜனனிக்காக களத்தில் குதித்து கதிரை அடி அடி என அடிக்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X