குணசேகரனை அலறவிட்ட தர்ஷன்.. ஜனனி பக்கம் நின்ற சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜாமீனில் வெளியே வந்த ஜனனி ஆக்ரோஷத்துடன் வீட்டுக்கு வந்து, குணசேகரனுக்கு சமமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இப்போது தான் உங்களுக்கும், எங்களுக்கும் இறுதி யுத்தம் ஆரம்பமாகிறது. இத்தனை நாள் அன்பு, பாசம், குடும்பம் என்று இருந்து விட்டோம். ஆனால், இனிமேல் உங்களுக்கு அன்பும் கிடையாது பாசமும் கிடையாது. எங்களுடைய கைவரிசையை இனிமேல் தான் நீங்க பார்க்க போகிறீர்கள். ஈஸ்வரி அக்காவிற்கு நடந்த அநியாயத்திற்கு நியாயம் வாங்கி கொடுக்காமல் நாங்கள் யாரும் ஓய மாட்டோம். அக்காவை அடிச்சி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது நீங்க தான், அதற்கு உடந்தையாக இருந்தது இந்த அன்புக்கரசி எல்லாம் எனக்கு தெரியும், இன்னும் இரண்டு நாளில் எல்லா உண்மையையும் கண்டுபுடிச்சி உண்மையை வெளியே கொண்டு வருகிறேன் என்று சவால் விடுகிறாள்.

ஜனனி பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த கதிர், யாரிடம் சவால் விடுற, இன்னையோட உன் கதையை முடிக்கிறேன் என கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க வருகிறான். இதை பார்த்துக் கொண்டிருந்த சக்தி தன்னுடைய மனைவி ஜனனிக்காக களத்தில் குதித்து கதிரை அடி அடி என அடிக்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் சரமாறியாக தாக்கிக் கொண்டு இருக்க அப்போது தர்ஷன், கரிகாலன் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்துகின்றனர். மேலும் கோபத்தின் உச்சத்தில் இருந்த சக்தி, இதற்கு மேல் யாராவது என்னுடைய பொண்டாட்டியும் மீது கை வைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என ஆக்ரோஷத்தோடு கத்துகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் மருத்துவமனையில் விசாலாட்சி என்னுடைய மருமகள் ஈஸ்வரியை நான் தான் பார்த்துக் கொள்வேன், ஈஸ்வரி குணமான பிறகு தான் நான், வீட்டுக்கு செல்வேன் என ஆடம் பிடித்துக் கொண்டு மருத்துவமனையிலேயே உட்கார்ந்திருக்கிறாள். நந்தினி, ரேணுகா, தர்ஷினி என அனைவரும் வீட்டுக்கு போங்க நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியும், குணசேகரன் சொன்ன ஏதோ ஒரு காரணத்திற்காக விசாலாட்சி மருத்துவமனையிலேயே இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

பெரிய பிரச்சனை வரும்: ஜீவானந்தம், பார்கவி இருவருமே கடற்கரையில் இருந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜீவானந்தம், தவறான முடிவை எடுத்துட்ட பார்கவி, நீ கனடாவிற்கு சென்று இருக்க வேண்டும். இங்கு நிலமை மோசமாக இருக்கிறது. இதனால் மேலும் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்கிறார். அப்போது பார்கவி, உங்களுடைய பேச்சை மீறியது தவறுதான், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், ஈஸ்வரி அம்மாவை இந்த நிலைமையில் விட்டு செல்வதற்கு எனக்கு மனசு வரவில்லை. அவர்கள் குணமான பிறகு அவர்களே என்னை வழி அனுப்பி வைக்கட்டும், நிச்சயமாக நான் செல்கிறேன் என்கிறாள். அதை தொடர்ந்து ஜீவானந்தம், இந்த விஷயத்தால், நமக்கு பல பிரச்சனைகள் வரப்போகிறது பார்கவி, நாம் அதற்கு தயாராகஇ இருக்க வேண்டும் என்கிறார்.

கல்யாணம் நடக்காது: இன்றைய எபிசோடில், தர்ஷனை மருத்துவமனைக்கு போகக்கூடாது என அறிவுக்கரசி தடுக்கிறாள். அதனால் கோபத்திற்கு சென்ற தர்ஷன், கல்யாணம் ஒழுங்கா நடக்க வேண்டும் என்றால், அம்மா சரியாகும் வரைக்கும் நான் ஹாஸ்பிடலுக்கு போவேன். அம்மாவை பார்க்கக்கூடாது என்று தடுத்தால், இந்த கல்யாணமே நடக்காது என்று குண்டை தூக்கி போடுகிறான். அதை தொடர்ந்து ஜனனி, தர்ஷனுக்கு போன் செய்து, அம்மாவிற்கு ஏதோ பெரிய விபரீதம் நடந்திருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இவர்களைவிட நாம் அதிகமாக யோசிக்க வேண்டும் என சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X