தர்ஷனுக்கு வசிய மருந்து..போலீசிடம் தடுமாறிய ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தர்ஷனை மருத்துவமனைக்கு போகக்கூடாது என அறிவுக்கரசி தடுத்ததால், கோபத்திற்கு சென்ற தர்ஷன், கல்யாணம் ஒழுங்கா நடக்க வேண்டும் என்றால், அம்மா சரியாகும் வரைக்கும் நான் ஹாஸ்பிடலுக்கு போவேன். அம்மாவை பார்க்கக்கூடாது என்று தடுத்ததால், இந்த கல்யாணமே நடக்காது என்று குண்டை தூக்கி போடுகிறான். அதை தொடர்ந்து ஜனனி, தர்ஷனுக்கு போன் செய்து, அம்மாவிற்கு ஏதோ பெரிய விபரீதம் நடந்திருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இவர்களைவிட நாம் அதிகமாக யோசிக்க வேண்டும் என சொல்கிறாள்.
அதன் பிறகு, தர்ஷன் இனிமேல் தான் நீ அமைதியாக இருக்க வேண்டும் திருமண விஷயம் பொருத்தவரை நீ எதைப்பற்றியும் பேசக்கூடாது அப்போதுதான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார். இதை தொடர்ந்து தர்ஷன் வீட்டுக்கு வருகிறான். வீட்டுக்கு தர்ஷன் வந்ததும், அவனை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அறிவுக்கரசி தன்னுடைய தங்கையை அழைத்து. தர்ஷனுடன் உனக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் நான் சொல்வதைக் கள் என்று சொல்லி, வசிய மருந்து கலந்த ஜூசை கொடுத்து அனுப்புகிறாள். ஜூசை வேண்டாம் என்று சொல்லும் தர்ஷனிடம் நைசாக பேசும் அன்புக்கரசி, இந்த கல்யாணத்தில் எனக்கும் விருப்பமில்லை இப்படி உங்களை கஷ்டப்படுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன் இதைப் பற்றி நான் அக்காவிடம் பேசுகிறேன் அதுவரை அமைதியாக இருங்கள் என்று தர்ஷனை ஏமாற்றி அந்த ஜூஸை குடிக்க வைக்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: வசிய மருந்து கலந்த ஜூசை குடித்த தர்ஷனுக்கு உடலில் ஏதோ மாற்றம் தெரிகிறது. இதனால் சந்தோஷப்படும் அறிவு, இவனுங்களையெல்லாம் இப்படி தான் டீல் செய்ய வேண்டும், தர்ஷன் இனி உனக்கு தான் என அன்புவிடம் கூறுகிறார். மறுநாள் சிறையில் இருந்து ஞானசேகரன் ஜாமினில் வெளியே வருகிறார். இந்தத் தகவலை வக்கீல் சொன்னதும் சந்தோஷப்படும் ஆதி குணசேகரன். ஞானசேகரன் ஜாமினில் வந்தது அறிந்து ஜனனி மற்றும் சக்தி அதிர்ச்சி அடைகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஈஸ்வரியின் வழக்கை விசாரிப்பதற்காக புதிதாக ஒரு அதிகாரி குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் குணசேகரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் அந்த அதிகாரி, ஜீவானந்தம் தலைமறைவாக இருக்கிறார் அவரைப்பற்றி விசாரிப்பதற்காக வீட்டுக்கு வந்தேன் என்று சொல்ல ஆத்திரப்படும் குணசேகரன் அவனைப் பற்றி விசாரிப்பதற்கு இங்கே ஏன் வரவேண்டும் என்கிறார்.
போலீஸ் அதிகாரியிடம் மோதிய ஜனனி: அப்போது அந்த அதிகாரி உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அவர்கருக்கு உதவி செய்கிறார்கள். அதனால் அவரைப் பற்றி விசாரணை நடத்த வந்தேன் என்று சொல்ல, அந்த நேரம் ஜனனி வருகிறாள். ஜனனியிடம் ஜீவானந்தம் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, ஜனனி அவரைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்கிறார். உடனே அந்த அதிகாரி, நாங்களாக கண்டுபிடித்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று சொல்ல அப்போது ஜனனி உங்களை பார்த்தால் போலீஸ் அதிகாரி போலவே தெரியவில்லை ஏதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு நடப்பது போல தெரிகிறது என என்கிறாள்.இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











