ஈஸ்வரியை தாக்கியது குணசேகரன் தான்.. ஜீவானந்தம் கையில் சிக்கிய ஆதாரம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: சிறையில் இருந்து ஞானசேகரன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த ஞானம் யாரிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். வீட்டிலிருந்த கதிர், அறிவுக்கரசி, கரிகாலன் என அனைவர் பேசியும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த ஞானத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த நேரம் ரேணுகா கீழே வந்து, ஏன் என்னிடம் நீங்கள் வருவதாக சொல்லவில்லை. உங்களுக்காக நான் காத்துக் கொண்டு இருந்தேன் என்று சொல்ல, கோபத்தோடு திரும்பிய ஞானம் ரேணுகாவை பளார் என்று அடிக்கிறார். இந்தக் குடும்பத்தை கெடுத்ததே நீ தான், வீட்டில் என்ன நடந்தது என அனைத்தையும் வழக்கறிஞர் என்னிடம் சொல்லிவிட்டார். அடுத்தடுத்து அண்ணணுக்கு பிரச்சனைகளை கொடுத்து என் அண்ணனை இந்த நிலைமைக்கு ஆக்கிவிட்டு, என்னிடம் சமாதானமாக பேசுறியா என அடிக்க பாயா ஜனனி, சக்தி இருவரும் அவரை தடுக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது:அதைத்தொடர்ந்து, ஈஸ்வரியின் வழக்கை விசாரிப்பதற்காக புதிதாக ஒரு அதிகாரி குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் குணசேகரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் அந்த அதிகாரி, ஜீவானந்தம் தலைமறைவாக இருக்கிறார் அவரைப்பற்றி விசாரிப்பதற்காக வீட்டுக்கு வந்தேன் என்று சொல்ல ஆத்திரப்படும் குணசேகரன் அவனைப் பற்றி விசாரிப்பதற்கு இங்கே ஏன் வரவேண்டும் என்கிறார். அப்போது அந்த அதிகாரி உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அவர்கருக்கு உதவி செய்கிறார்கள். அதனால் அவரைப் பற்றி விசாரணை நடத்த வந்தேன் என்று சொல்ல, அந்த நேரம் ஜனனி வருகிறாள். ஜனனியிடம் ஜீவானந்தம் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, ஜனனி அவரைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்கிறார். உடனே அந்த அதிகாரி, நாங்களாக கண்டுபிடித்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று சொல்ல அப்போது ஜனனி உங்களை பார்த்தால் போலீஸ் அதிகாரி போலவே தெரியவில்லை ஏதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு நடப்பது போல தெரிகிறது என என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

குணசேகரன் தான் காரணம்: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி உள்ளது, அதில், அறிவுக்கரிசி, புதிதாக வந்திருக்கும் அதிகாரிக்கு போன் செய்து, ஒருவரையும் உயிரோடு விடக்கூடாது. அனைவரையும் கூண்டோடு அனுப்பி விட வேண்டும் என சொல்கிறாள். அதை கேட்டு அந்த அதிகாரியும் அதை செய்து விட்டால் போதும் என சொல்கிறார். அதை தொடர்ந்து ஜீவானந்தம் தன்னுடைய போனை ஆன் செய்ய, அந்த போனில் ஈஸ்வரி அனுப்பிய வாய்ஸ் நோட் வருகிறது. அதில், எனக்கு எது நடந்தாலும் அதற்கு காரணம் குணசேகரன் தான் என சொல்கிறாள்.

ஆதாரம் சிக்கியது: இதைக்கேட்ட ஜீவானந்தம், ஜனனிக்கு போன் செய்து, தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் குணசேகரன் தான் என ஈஸ்வரி தனக்கு அனுப்பி இருக்கும் வாய்ஸ் நோட் பற்றி சொல்கிறார். உடனே ஜனனி அந்த ஆதாரத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். இதில் அறிவுக்கரசிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. ஈஸ்வரி அக்கா போனில் இருந்த அனைத்து வீடியோக்களையும் யாரோ டெலிட் செய்திருக்கிறார்கள் என சொல்கிறார். பின் ஜீவானந்தம் அந்த டெலிட் ஆன வீடியோவை, ரெக்கவரி செய்ய பாருங்கள். அதன் பிறகு தான் ஆதாரத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும் என சொல்கிறார். இதை யடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X