தர்ஷனுக்கு என்னாச்சு.. கொடூர திட்டத்துடன் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜீவானந்தமும் பார்கவியும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, பார்கவி, நீங்கள் முதன் முதலில் நீங்கள் ஈஸ்வரி அம்மாவை எங்கு சந்தித்தீர்கள் என்று கேட்க, ஜீவானந்தம் தனது வாழ்க்கையில் நடந்த கதையை சொல்கிறார். நான் ஊர் ஊராக சென்று கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை சுவற்றில் எழுதிக் கொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த வழியாக ஈஸ்வரி கல்லூரிக்கு போவார்கள். ஒரு சில வினாடிகளிலே எங்களுக்குள் பார்வை பரிமாற்றம் மட்டும் தான் நடந்தது. நான் அந்த இடத்தில் இல்லை என்றால் ஈஸ்வரி என்னை தேடுவாள். ஈஸ்வரி வரவில்லை என்றால் நான் தேடுவேன். இதை நான் காதலென நினைத்துக் கொண்டு ஈஸ்வரியின் அப்பாவிடம் பெண் கேட்டு சென்று விட்டேன். ஆனால் உனக்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்டு ஈஸ்வரி அப்பா எனக்கு மறுப்பு தெரிவித்து அனுப்பிட்டார்.
அதன் பிறகு தான் ஈஸ்வரிக்கு அவசர அவசரமாக குணசேகரனை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். ஒருவேளை நான், ஈஸ்வரியை பெண் கேட்க செல்லாமல் இருந்திருந்தால் ஈஸ்வரிக்கு நல்ல வாழ்க்கை அமைந்து இருக்கும், ஈஸ்வரி படித்து இருப்பாள் என்கிற குற்ற உணர்ச்சி மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அதுதான் எப்போது வரையும் எங்களுக்குள் நட்பாக இருக்கிறது என ஜீவானந்தம் சொல்லி முடிக்ககிறார். அதன் பின், ஜீவானந்தம் தன்னுடைய பழைய ஃபோனை ஆன் செய்ய, அதில் ஈஸ்வரி அனுப்பிய வாய்ஸ் நோட் வருகிறது. அதில், குணசேகரன் என்னை கடுமையாக தாக்கிவிட்டார். எனக்கு எதாவது நடந்தால், அதற்கு காரணம் குணசேகரன் என வாய்ஸ் நோட் அனுப்பி உள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைகேட்டு அதிர்ச்சி அடையும் ஜீவானந்தம், ஜனனிக்கு போன் செய்து, தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் குணசேகரன் தான் என ஈஸ்வரி தனக்கு அனுப்பி இருக்கும் வாய்ஸ் நோட் பற்றி சொல்கிறார். உடனே ஜனனி அந்த ஆதாரத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். இதில் அறிவுக்கரசிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. ஈஸ்வரி அக்கா போனில் இருந்த அனைத்து வீடியோக்களையும் யாரோ டெலிட் செய்திருக்கிறார்கள் என சொல்கிறார். பின் ஜீவானந்தம் அந்த டெலிட் ஆன வீடியோவை, ரெக்கவரி செய்ய பாருங்கள். அதன் பிறகு தான் ஆதாரத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும் என சொல்கிறார்.

தர்ஷனுக்கு என்னாச்சு: இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி உள்ளது, அதில், தொடர்ந்து வீட்டில் பிரச்சனைகள் நடந்து கொண்டு இருப்பதால் வீட்டில் பூஜை போடப்படுகிறது. அப்போது பூசாரி இந்த பூஜை திருமணத்திற்காக போடப்படும் பூஜை தானே மாப்பிள்ளையும் மணப்பெண்ணையும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல, அன்புக்கரசி தர்ஷனை அழைப்பதற்காக செல்கிறார். தர்ஷனுக்கு அறிவுக்கரசி கொடுத்த வசிய மருந்தால், என்ன செய்வது என்றே தெரியாமல் தொடர்ந்து ஏதோ விதமான மயக்க நிலை இல்லையே இருக்கிறான். தர்ஷனை பார்த்த பூசாரி மாப்பிள்ளை ஏன் டல்லாக இருக்கிறார் என்று கேட்க, அவர் தூக்க கலக்கத்தில் இருக்கிறார் என்று அறிவுகரசி சொல்லி சமாளிக்கிறாள். தர்ஷன், அன்புக்கரசி திருமண விஷயத்தில் அறிவுத்தரசி ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் செய்து இருக்கிறாள். அதற்கு ஏற்றபடியே குணசேகரன் ஈஸ்வரியை அடித்த வீடியோவும் அன்புக்கரசியிடம் உள்ளது. இதனால், அறிவுக்கரசியால் ஏதோ பெரிய பிரச்சனை வெடிக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications











