அறிவுக்கரசியின் போனில் இருக்கும் ஆதாரம்.. நைசாக தூக்கிய ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தர்ஷன், அன்புக்கரசியின் திருமணம் நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காக குணசேகரன் வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறார். அந்த பூஜையில் நிற்கும் தர்ஷன் தூக்க கலக்கத்துடன், ஏதோ ஒரு விதமாக இருப்பதை பார்த்த ஜனனி, சக்தியிடம் தர்ஷன் ஏதோ ஒரு மாதிரி இருக்கிறான். என்ன ஆனது என்றே தெரியவில்லை என சொல்ல சக்தி கீழே வந்தது. தர்ஷனிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறான்.
அப்போது கதிர், இவனையும் உன் பக்கத்துல சேர்த்துக்கொள்ளலாம் என பாக்கறியா... அது நடக்கவே நடக்காது, நீ எதுவும் அவனிடம் பேசத் தேவையில்லை தர்ஷன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று சொல்கிறார். அப்போது, முல்லை ஓவராக பேச ஆத்திரப்படும் சக்தி, முல்லையை அடிக்க பாய்ந்து அவனின் கழுத்தில் காலை வைத்து மிதித்து, தேவையில்லாமல் பேசினால் அவ்வளவு தான் என சொல்கிறார். பின் சக்தியை சமாதானப்படுத்தி ஜனனி அவனை மேலே அழைத்துச் செல்கிறாள். அப்போது சக்தி, தர்ஷனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவன் ரொம்ப சோர்வாக இருக்கிறான் என சொல்கிறான். உடனே ஜனனி, நான் தான் உண்மையை கண்டுபிடிக்கும் வரைக்கும்,அமைதியாக இரு என்று சொன்னேன் அதன் அப்படி இருக்கிறான் போல என சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைத்தொடர்ந்து, பூசாரி வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு இந்த கலசத்தில் இருக்கும் நீரை அனைத்து அரையிலும் தெளிக்க வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்ட ரேணுகா, நந்தினி, ஜனனி மூன்று பேரும், கீழே இறங்கி வந்து அந்த கலசை நீரை வாங்கி அனைத்து அறைகளிலும் தெளிக்கின்றனர். அப்போது, ஜனனி, ஒரு அறையில் அறிவுகரசியின் ஃபோன் இருப்பதை பார்த்து விடுகிறாள். உடனே நந்தினிக்கு ஃபோன் செய்து, அறிவுகரசியின் ஃபோன் அந்த அறையில் இருக்கிறது. அறிவுக்கரசி வெளியே பேசிக்கொண்டு இருக்கிறாள். அந்த அறையில் கலச நீர் தெளிப்பது போல சென்று போனை என்னிடம் எடுத்துக் கொடுத்து விடுங்கள் என சொல்கிறாள்.
ஃபோனில் இருக்கும் ஆதாரம்: இதைத்தொடர்ந்து நந்தினியும் கலச தண்ணீர் தெளிப்பதுபோல அறிவுகரசியின் அறைக்கு செல்ல, அதை பார்த்து அறிவுக்கரசி இந்த அறையில் உனக்கு என்ன வேலை என சத்தம் போடுகிறாள். அப்போது, நந்தினி இது என்ன உன் வீடு மாதிரியே பேசிகிட்டு இருக்க, இது என் வீடு நான் இருந்த இடம் அதுல தான் இப்ப நீ ஒண்டிக்கிட்டு இருக்க, கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டும் என்பதற்காக பூஜை போட்டு, கலச நீர் தெளிக்க சொன்னாங்க, கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமா.. இல்ல இந்த வீட்டில எழவு விழ வேண்டுமா என சொல்கிறாள். இது குணசேகரன் காதில் விழ,ஏய் நந்தினி என்ன பேசிக்கிட்டு இருக்க, என நந்தினியை மிரட்டி விட்டு, அறிவுக்கரசி நீ எதுக்கு அங்கே போன, தேவையில்லாமல் அவளிடம் பேசாதே இங்கே வா என்று அழைக்கிறார். இதையடுத்து உள்ளே வரும், நந்தினி வெளியில் ஃபோனை எடுத்து வெளியில் காத்துக்கொண்டிருந்த ஜனனியிடம் ஃபோனை விடுகிறாள். இதை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











