பதுங்கிய அறிவுக்கரசி.. குணசேகரனுக்கு வந்த சந்தேகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நந்தினிய கலச தண்ணீர் தெளிப்பதுபோல அறிவுகரசியின் அறைக்கு சென்று அவளுக்கு தெரியாமல் ஃபோனை எடுத்து, வெளியில் காத்திருந்த ஜனனியிடம் எடுத்துக் கொடுக்கிறாள். இதையடுத்து, ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவரும் போனை ஓப்பன் செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால், பாஸ்வேர்டு தெரியாததால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், அப்பொழுதும் மொபைல் ஓப்பன் ஆகாததால், ஜனனி கதிரின் பெயரை பாஸ்வேர்டாக இருக்குமோ என சொல்லிவிட்டு போட, ஃபோன் ஓப்பன் ஆகிறது. அதில் கேலரிக்குள் சென்று பார்க்க வீடியோ, போட்டோ என அனைத்தையும் பார்க்க அனைத்தும் டெலிட் ஆகி இருப்பதாக சொல்கிறாள்.
அதற்குள் அறையில் போன் இல்லாததை தெரிந்து கொண்ட அறிவுக்கரசி, இவர்களைத் தேடி வந்து கையில் வைத்திருந்த போனை புடுங்கி, ஈஸ்வரியை மூன்று பேரும் அடித்துவிட்டு அந்த பழியை என் மீது போட பார்க்கிறீர்களா... நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதை கண்டுபிடிக்க முடியாது என சொல்ல ஜனனி அதை கண்டுபிடித்து உன் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என சவால் விடுகிறாள். பின், கீழே வரும் அறிவுக்கரசி பீரோவில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த போனை எடுத்து, இதை யாரிடம் கொடுத்து வைப்பது. யாரிடம் கொடுத்தாலும் பிரச்சனையாகிவிடுமே பதட்டத்தோடு யோசித்துக் கொண்டு, மேல் அலமாரியில் போனை ஒலித்து வைக்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: பின் முல்லை, குணசேகரிடம் நான் சொன்னது போல பணிக்கர் சாமியாரிடம் சென்று வந்தால் நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும். அவர் எல்லாத்தையும் சரியாக சொல்லக்கூடியவர், அவரை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என சொல்கிறான். அப்போது முல்லை, அதெல்லாம் தேவையில்லை, எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் என சொல்கிறாள். அப்போது, குணசேகரன், நீ ஏன் அறிவுகரசி அந்த சாமியாரை பார்க்க வேண்டாம் என சொல்கிறாய் என்கிறார். இல்ல மாமா, உங்களுக்கு பிடிக்காது அதனால் வேண்டாம் என்று சொன்னேன் என்கிறாள். இதனால், அறிவுக்கரிசி மீது ஏதோ சந்தேகம் வர, குணசேகரன், இப்பொழுதே அந்த சாமியாரை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என சொல்ல அனைவரும் வண்டியில் கிளம்புகின்றனர். வீட்டிலிருந்து எப்படி கிளம்புவது அந்த போனை ஜனனி எடுத்துவிட்டால் என்ன செய்வது என தெரியாமல் பதற்றத்தோடு நிற்கிறாள் அறிவுக்கரசி.
ஆதாரம் சிக்குமா: மறுபக்கம், ஜீவானந்தம், ஈஸ்வரி அனுப்பிய ஆடியோவை திரும்பத் திரும்ப இருக்கிறார். அப்போது பார்கவி, இந்த ஆதாரத்தை நிச்சயமாக நாம் போலீஸில் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். ஆதாரம் இருந்தும் அதை போலிஸ் இடம் கொடுக்காமல் நாம் தாமதப்படுத்தி விட்டோம் இப்போதே அதை போலீசில் கொடுத்து விடலாம் என சொல்கிறாள் ஜீவானந்தம் இதை வைத்து நாம் அவர்கள் மீது புகார் கொடுத்தால் அவர்கள் ஈசியாக வெளியே வந்து விடுவார்கள் இதற்கு வலுவான ஆதாரம் தேவை என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











