அறிவுக்கரசியை கதற கதற அடித்த பெண்கள்.. குணசேகரன் கையில் சிக்கிய ஃபோன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: முல்லை, குணசேகரிடம் நான் சொன்னது போல பணிக்கர் சாமியாரிடம் சென்று வந்தால் நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும். அவர் எல்லாத்தையும் சரியாக சொல்லக்கூடியவர், அவரை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என சொல்கிறான். அப்போது முல்லை, அதெல்லாம் தேவையில்லை, எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் என சொல்கிறாள். அப்போது, குணசேகரன், நீ ஏன் அறிவுகரசி அந்த சாமியாரை பார்க்க வேண்டாம் என சொல்கிறாய் என்கிறார். இல்ல மாமா, உங்களுக்கு பிடிக்காது அதனால் வேண்டாம் என்று சொன்னேன் என்கிறாள்.
இதனால், அறிவுக்கரிசி மீது ஏதோ சந்தேகம் வர, குணசேகரன், இப்பொழுதே அந்த சாமியாரை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என சொல்ல அனைவரும் வண்டியில் கிளம்புகின்றனர். வீட்டிலிருந்து எப்படி கிளம்புவது அந்த ஃபோனை ஜனனி எடுத்துவிட்டால் என்ன செய்வது என தெரியாமல் பதற்றத்தோடு நிற்கும் அறிவுக்கரசி ஏதோ காரணத்தை சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விடுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: வீட்டில் இருக்கும் ஜனனி, தர்ஷினிக்கு போன் செய்து அறிவுக்கரசியின் ஃபோனில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. அதை நாம் எப்படியாவது எடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறாள். இதையடுத்து, ஜனனி, நந்தினி, தர்ஷினி என அனைவரும் ஒன்றாக வெளியில் செல்கின்றனர். அதே நேரம் குணசேகரன், மண்டபத்தை பார்த்துவிட்டு அட்வான்ஸை கொடுத்து விடலாம் என கிளம்புகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்ட ஜனனி, நந்தினி, ரேணுகா, தர்ஷினி என அனைவருமே வீட்டுக்குள் வருகின்றனர்.
அடிவாங்கிய அறிவுக்கரசி: வீட்டின் கதவை அறிவுக்கரசி பூட்டிக்கொண்டு, தனது அறையில் அந்த போனை எடுத்து வீடியோவை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். பின் தர்ஷினி, பால்கனி வழியாக ஏறி வீட்டிற்குள் வந்து, கதவை திறந்து விட அனைவருமே வீட்டிற்குள் வருகின்றனர். அறிவுக்கரசியின் அறையின் கதவை தட்ட, அவள் கதவை திறக்காமல் இருக்கிறாள். பின் அந்த போனை தன் புடவையில் மறைத்துவைத்துக்கொண்டு அறிவுக்கரசி கதவை திறக்க, அனைவரும் சேர்ந்து போன் எங்கே என்று கேட்டு அடிக்கின்றனர். அனைவரும் அடித்தும், அறிவுக்கரசி போனை தரமாட்டேன் எனவும் பிடிவாதமாக இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து குணசேகரன் மண்டபத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை மீனாட்சி படத்தின் முன்பு வைத்து விட்டேன். அதை எடுத்துக் கொண்டு வந்து விலாம் காரை திருப்பிக்கொண்டு வீட்டுக்குள் வருகிறார்.
அடுத்து என்ன நடக்கும்: கார் உள்ளே சரியாக வர அறிக்கரசி கடகட வேணா ஓடி வந்து அந்த போனை தூக்கி வீச அந்த போன் மீது கார் ஏறி இறங்குகிறது. அப்போது அறிவுக்கரசி வீட்டில் யாரும் இல்லாத போது, என்னை அனைவரும் சேர்ந்து அடிக்கின்றனர் என கூறுகிறாள். உடனே ஜனனி அந்த ஃபோனில் ஏதோ ரகசியம் இருக்கிறது. ஈஸ்வரி அக்கா பற்றிய ரகசியம் இருக்கிறது. அது தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அறிவுக்கரசி அதை மறைக்கிறாள் என சொல்கிறாள். உடனே குணசேகரன், இதில் என்ன இருக்கிறது என்று அறிவுகரசியிடம் கேட்க, இதில் எதுவுமே இல்ல மாமா, எல்லாரும் பொய் சொல்கிறார்கள் என்கிறாள்.
பயத்தில் அறிவுக்கரசி: இதை நம்பாத குணசேகரன் அந்த போனில் என்ன இருப்பது என்பது தெரிந்து கொள்வதற்காக ஒரு, ஒருவரை வரவைத்து அதில் என்ன இருக்கிறது என பார்க்கிறார். ஆனால், அவன் அந்த போனில் இருக்கும் வீடியோவை தன்னுடைய போனுக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த போனில் எந்த வீடியோவில் இல்லை என சொல்லிவிடுகிறான். மேலும், தனது நண்பனிடம் அந்த போனில் இருக்கும் வீடியோவை கட்டி, குணசேகரன் குடும்பம் பெரிய குடும்பம், இந்த வீடியோ காட்டி அவரிடம் பணத்தை பறிக்கலாம் என சொல்கிறான்.


Click it and Unblock the Notifications











