ஈஸ்வரியை கொல்ல நடக்கும் சதி.. கூட்டு சேரும் கதிர்,அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: அறிவுக்கரசியிடம் இருந்து ஃபோனை வாங்கி நேற்று குணசேரன் வீடிடே போர்க்களம் ஆனாது. வெளியில் போனவர்கள் வீட்டிற்கு வந்து விட, அறிவுக்கரசி போனை தூக்கி எறிய அது காரில் சிக்கி மொத்தமாக உடைந்து போய்விடுகிறது. ஜனனி, ஈஸ்வரி அக்கா பற்றி ஏதோ ஒரு ரகசியம் அந்த ஃபோனில் இருக்குது என்று சொல்கிறாள். ஆனால், அறிவுக்கரசியோ அது எதுவுமே இல்ல மாமா.. இவளுங்க பொய் சொல்றாங்க என்று சொல்கிறாள். இதை நம்பாத குணசேகரன் அந்த போனில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, ஹக்கர் ஒருவரை வீட்டிற்கு வர சொல்கிறார்.

வீட்டிற்கு வந்த ஹக்கரை, கதிர், குணசேகரன் மிரட்டு மிரட்டு என்று மிரட்ட, கடுப்பாகிப்போன அவன், அந்த போனில் இருந்த ஆதாரத்தை தனக்கு மாற்றிக்கொண்டு, இந்த போனில் இருந்து இனி எதையுமே எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறான். மேலும், தனது நண்பனிடம் அந்த போனில் இருக்கும் வீடியோவை கட்டி, குணசேகரன் குடும்பம் பெரிய குடும்பம், இந்த வீடியோ காட்டி அவரிடம் பணத்தை பறிக்கலாம் என திட்டம் போடுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அறிவுக்கரசி பதட்டமாக இருப்பதை பார்த்த முல்லை. என்ன அறிவுக்கரசி என் கவலையா இருக்க, அந்த ஃபோனில் தான் எதுவும் இல்லையே, பின்ன ஏன் கவலையா இருக்க என்று கேட்கிறான். உடனே அறிவுக்கரசி, கரிகாலன் பேச்சைக் கேட்டு யாரோ ஒரு மக்கு சாம்பிராணியை ஹேக்கராக அழைத்து வந்து இருக்கிறார்கள். அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. அந்த ஃபோனில் தான் முக்கியமான ஆதாரமே இருக்கு. இந்த போன் யார் கையிலாவது சிக்குவதற்கு முன், அந்த போனை எடுத்து அதில் இருக்கும் ஆதாரத்தை நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் அதற்கான வேலையை பார் என்கிறாள். அதே போல ஜனனியில், அந்த போனில் ஏதோ ஒரு விஷயம் இருக்கு, எப்படியாவது அந்த போனை எடுக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர்.

ஈஸ்வரி கொல்ல நடக்கும் சதி: இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ, வெளியாகி உள்ளது. அதில், இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த ஈஸ்வரி பதற்றத்தோடு கண்ணை திறந்து பார்க்கிறாள். அப்போது அவளது நினைவுக்கு குணசேகரன் தன்னை அடித்து தாக்கியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அறையின் கதவு சாத்தப்பட்டு இருக்க, வெளியில் தர்ஷினி சோர்வாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறாள். இதனால், ஈஸ்வரி மெதுவாக எழுந்திருக்க முயற்சி செய்கிறாள். வீட்டில், குணசேகரன், கதிர், அறிவுக்கரசி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது குணசேகரன், இந்த வீட்டில் இருக்கும் பெண்கள் ஈஸ்வரியை கொலை செய்து விட்டு அந்த பழியை கூட என் மீது போட்டு விடுவார்கள். அவள் உயிரோடு இருக்கும் வரை என்றைக்குமே எனக்கு பிரச்சனை தான் என சொல்கிறார். இதை கேட்ட, கதிர், ஈஸ்வரி உயிரோடு இருக்கும் வரை அண்ணனுக்கு பிரச்சனை தான். அதனால், ஈஸ்வரியின் கதையை முடித்து விட வேண்டியது தான் என்று அறிவுக்கரசியிடம் சொல்கிறாள்.

நடக்கப்போவது என்ன: மறுபக்கம் வீட்டில், ஜனனி, தர்ஷினி, சக்தி என அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனி, அந்த ஃபோனில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அது வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அறிவுக்கரசி என்னெல்லாம் செய்தாள். ஈஸ்வரி அக்கா விஷயத்தில குணசேகரனுக்கு அறிவுக்கரசிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அக்காவின் உயிருக்கு கூட ஆபத்து வரும், அக்கா எழுந்து வந்தால், உண்மையை சொல்லிவிடுவார் என பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதற்காக அக்காவை கொல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது இனிமேல் நாம் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறாள். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X