கத்திமுனையில் ஈஸ்வரி.. காப்பாற்ற போராடும் தர்ஷினி.. நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், குணசேகரன், வீட்டில் அனைத்து இடத்திலும், சிசிடிவி கேமராவை பொருத்துகிறார். இதைப்பார்த்த கதிர், எதற்கு இந்த தேவையில்லாத வேலை, இதை எல்லாம் பார்த்த அவளுங்க நாம பயந்து விட்டதாக நினைத்துக்கொண்டு, இனனும் ஓவராக ஆட்டம் போடுவாளுங்க என்று சொல்கிறான். அப்போது குணசேகரன், கதிர், அறிவுக்கரசி இருவரையும் வெளியே தனியாக அழைத்து வந்து பேசுகிறார்.
கதிர் இந்த நேரத்தில் நாம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் என் மீது தான் கோபம். என்னை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால், எனக்கு ஆதரவாக இருக்கும் உங்கள் மீதும் அவர்களுக்கு கோவம் வருகிறது. ஒரு கட்டத்தில் நீங்களே, எனக்கு எதிரியாகக்கூட மாறலாம். அந்த நேரத்தில் என்னை, நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அதற்காகத்தான் இது போன்ற விஷயங்களை நான் செய்து கொண்டு இருக்கிறேன்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மருத்துவமனையில் அடிபட்டு கிடக்கும் ஈஸ்வரி, எழுந்து வந்து நான் தான் அடித்தேன் என்று சொன்னால், நான் சிறைக்கு சென்று விடுவேன். அவள் எழுந்து வந்தால் மிகப்பெரிய பிரச்சனை ஆகிவிடும். இப்படி சொன்னதும் ஈஸ்வரியை கொல்வதற்கு கிளம்பி விடாதே, உனக்கும் குடும்பம் இருக்கிறது என நைசாக ஈஸ்வரியின் கதையை முடித்துவிடு என்று சொல்லாமல் சொல்கிறார் குணசேகரன். இதைக்கேட்ட கதிர், அறிவுக்கரசியிடம், ஈஸ்வரியால் தான், குடும்பம் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறது. ஈஸ்வரி இனிமேல் உயிரோடு இருக்கக் கூடாது அவளுடைய கதையை முடித்து விட்டால், பழி அந்த ஜீவானந்தம் மீது விழிந்துவிடும் நாம் தப்பித்துக்கொள்ளலாம், முதலில் ஈஸ்வரியின் கதையை முடிக்க ஏற்பாடு செய் என்கிறான்.
தர்ஷன் திருமணம்: வீட்டில், ஜனனி, தர்ஷினி, சக்தி என அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனி, அந்த ஃபோனில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அது வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் குணசேகரன் படாதபாடு படுகிறார். அக்கா எழுந்து வந்தால், உண்மையை சொல்லிவிடுவார் என்கிற பயமும் அவர்களுக்கு இருக்கும். இதனால், அக்காவின் உயிருக்கு கூட பாதிப்பு வரலாம் இனி மேல் தான் நாம் அக்காவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறாள். மறுபக்கம் கோமாவில் இருந்த ஈஸ்வரி பதற்றத்தோடு கண்ணை திறந்து பார்க்கிறாள்.
கத்திமுனையில் ஈஸ்வரி: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோவில், தர்ஷன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. கதிர், ஈஸ்வரியை கொல்வதற்கு ரௌடிகளை அனுப்பி இருப்பதால் ஒருவிதமான பதற்றத்தோடு இருக்கிறான். மற்றொரு பக்கம் ஜனனி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் அக்கா ஆசைப்பட்டது போல திருமணம் நடக்க வேண்டும், ஜீவானந்தம் சார் சரியான நேரத்தில் பார்கவியை இங்கே அழைத்து வந்துவிடுவார் என்கிறாள். அடுத்து மருத்துவமனையில் இருக்கும் தர்ஷனிக்கு போன் செய்யும் ஜனனி, அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள் என்கிறாள். இப்படி சொல்லிக்கொண்டிருந்த நேரத்திலேயே சில ரௌடிகள் ஈஸ்வரி இருக்கும் அறைக்குள், தர்ஷினி , டாக்டர் என அனைவரையும் அடித்து தள்ளிவிட்டு, ஈஸ்வரியை கத்தியால் குத்துவதற்காக வருகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











