தர்ஷன் - பார்கவி திருமணம்.. ஜனனி எடுத்த முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: இன்றைய எபிசோடு, கோமாவில் இருக்கும் ஈஸ்வரிக்கு நினைவு திரும்பிய நிலையில், கதிர் ஏற்பாடு செய்த அடி ஆட்கள் மருத்துவமனைக்கு வந்து, ஈஸ்வரியை கத்தியால் குத்துவது போல, கனவு கண்டு பயந்து எழுகிறாள் ஜனனி. பயத்தில் இருக்கும் ஜனனி, நந்தினியின் அறைக்கு சென்று, ஈஸ்வரி அக்காவை யாரோ கத்தியார் குத்திவிட்டார்கள். எனக்கு ஏதோ பயமாக இருக்கிறது கொற்றவையிடம் சொல்லி அக்காவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சொல்கிறாள். உடனே நந்தினி இப்பொழுது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கு ஜனனி, காலையில் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறாள்.

காலையில், குணசேகரன் வீட்டில், தர்ஷன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. கதிர், ஈஸ்வரியை கொல்வதற்கான திட்டத்தை போட்டுக்கொண்டு இருப்பதால், ஒருவிதமான பதற்றத்தோடு இருக்கிறான். மற்றொரு பக்கம் ஜனனி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் அக்கா ஆசைப்பட்ட படி திருமணம் நடக்க வேண்டும், ஜீவானந்தம் சார் சரியான நேரத்தில் பார்கவியை இங்கே அழைத்து வந்துவிடுவார் என்கிறார். பின், நந்தினி ரேணுகா இருவரும் பார்கவிக்கு முகூர்த்தப்புடவை எடுப்பதற்காக கடைக்கு செல்கின்றனர். சக்தியும்,ஜனனியும் மருத்துவமனையில் இருக்கும் ஈஸ்வரியை பார்ப்பதற்காக செல்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: வீட்டில் தர்ஷன் திருமண வேலைகளில் மும்முரமாக இருக்கும் ஞானம், வெளியில் இன்று பந்தல் போட்டு விடுவார்கள், இந்த தெரு முழுக்க லைட் செட்டு போட சொல்விட்டேன் என்கிறான். உடனே குணசேகரன் அது எல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். பந்தல் மட்டும் போட்டால் போதும், ஏற்கனவே கல்யாணத்தில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போதைக்கு பந்தல் போட்டால் போதும் மற்றதை சத்திரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

ஜனனியின் மாஸ் என்ட்ரி: அந்த நேரம் ரேணுகா, நந்தினி இருவரும் முகூர்த்த புடவை எடுத்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். அப்போது கரிகாலன் வீட்டில் கல்யாண வேலை இருக்கும் போது, இரண்டு பேரும் எங்க போய் விட்டு வருகிறீர்கள் என கேட்கிறான். உடனே நந்தினி, உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை போடா என சொல்கிறாள். உடனே கதிர், அவனுக்கு பதில் சொல்ல வேண்டாம், நான் கேட்கிறேன் பதில் சொல்லு இப்ப எங்க ரெண்டு பேரும் போயிட்டு வரீங்க என கேட்கிறார். அப்போது, நந்தினி உனக்கு பதில் சொன்ன காலம் எல்லாம் எப்பவோ முடிஞ்சி போச்சு இருந்தாலும் சொல்கிறேன், முகூர்த்த புடவை வாங்கிவிட்டு வருகிறோம் என்கிறாள். யாருக்கு முகூர்த்த புடவை வாங்க போனிங்க என்று கேட்க, அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை யாருக்கோ வாங்கினேன். இல்ல நான் கூட கட்டிப்பேன் என்று கிண்டலாக பேசுகிறாள்.

இந்த கல்யாணமே நடக்கக்கூடாது என நினைக்கும் நீங்க முகூர்த்த புடவை வாங்குனீங்களா. எங்க கல்யாண பெண்ணோட பெயரை சொல்லுங்க என கேட்கிறாள் அறிவுக்கரசி. அப்போது, வீட்டிற்குள் வரும் ஜனனி நான் சொல்கிறேன். தர்ஷன் கல்யாணம பண்ணிக்கப்போகிற பொண்ணுக்குத்தான் புடவை வாங்கினோம் என சத்தமாக சொல்லிவிட்டு, அறிவுக்கரசியின் காதில் பார்கவியின் பெயரை சொல்கிறாள் ஜனனி இடைக்கேட்டு அனைவரும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X